வால்பாறை:வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., 'நெட் ஒர்க்' பிரச்னையால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அளவில் உள்ளனர். இதனால், 11 இடங்களில் மொபைல்போன்களுக்கான டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வால்பாறையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பி.எஸ்.என்.எல்., சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வங்கிகள் அனைத்தும் பி.எஸ்.என்.எல்., சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணி முதல் நேற்று பகல், 1:30 மணி வரை தொடர்ந்து, 16 மணி நேரம் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால், 'நெட் ஒர்க்' பிரச்னையும் ஏற்பட்டது. வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்களும், மொபைல்போனில் அவசரத்தேவைக்கு தொடர்பு கொள்ளமுடியாமலும் தவித்தனர்.பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மழை காரணமாக, டவர் லைன் பழுதானது. தொழில்நுட்பக் கருவிகள் சரிவர வழங்கப்படாததால், வால்பாறை மலைப்பகுதியில் இது போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுகிறது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE