பொது செய்தி

தமிழ்நாடு

12 ஆயிரம் அரசம்பட்டி தென்னங்கன்று: ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில் தயார்

Added : டிச 18, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், 12 ஆயிரம் அரசம்பட்டி தென்னங்கன்றுகள், விற்பனைக்கு தயாராகியுள்ளன என, தென்னை வளர்ச்சி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பெரும்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கான பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. நேற்று, இந்த நிறுவனத்தில், 25 விவசாயிகள் பங்கேற்ற சென்னை வளர்ப்பு, பராமரிப்பு

பொள்ளாச்சி:ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், 12 ஆயிரம் அரசம்பட்டி தென்னங்கன்றுகள், விற்பனைக்கு தயாராகியுள்ளன என, தென்னை வளர்ச்சி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பெரும்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கான பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. நேற்று, இந்த நிறுவனத்தில், 25 விவசாயிகள் பங்கேற்ற சென்னை வளர்ப்பு, பராமரிப்பு கருத்தரங்கு நடந்தது.பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் திருவேங்கடம் தலைமை வகித்தார். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சிவகுமார் பேசியதாவது:கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈக்களால், தென்னைகள் பாதிக்கப்பட்டு, தேங்காய் மகசூல் குறைந்ததால், விவசாயிகளின் வருவாயும் பாதித்தது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, வேளாண்துறை உரிய மருந்து தெளிப்பை பரிந்துரைத்து வருகிறது.பொள்ளாச்சி வடக்கு மற்றும் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நோய் தாக்குதலுக்கு உட்படாத, அரசம்பட்டி ரக தென்னைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த ரக தென்னைகள் உயரமாக வளரக்கூடியதால், பூச்சி தாக்குதல் இருக்காது.தென்னை மரங்களுக்கு இடையே உழவு செய்வது, ஆண்டுக்கு இருமுறை மேற்கொண்டால் போதும். மரங்களுக்கு அருகே, நான்கு அடி துாரம் வரை வேர்கள் செல்வதால், மரத்தை சுற்றி ஆழமாக உழவு செய்தல் கூடாது.ஆழியாறு பண்ணையில், அரசம்பட்டி ரக தென்னங்கன்றுகள் விற்கப்படுகின்றன. தற்போது, 12 ஆயிரம் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. வரும் மழைக்காலத்தில் இந்த கன்றுகளை நடவு செய்யலாம். தேவையான தென்னங்கன்றுகள் பெற, முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 04253 288722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X