வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அதிகாரத்துடன் செயல்பட வைக்கும்: அமைச்சர் | Dinamalar

வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அதிகாரத்துடன் செயல்பட வைக்கும்: அமைச்சர்

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (24)
Share
புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் செயல்பட வைக்கும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லி எல்லைப் பகுதியில் 22 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள்

புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் செயல்பட வைக்கும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.



latest tamil news


மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லி எல்லைப் பகுதியில் 22 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று (டிச.,17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய சட்டங்கள் தொடர்பாக 8 பக்கத்திற்கு கடிதம் எழுதி, தனது டுவிட்டரில் பகிர்ந்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான் ஒரு விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்தே, விவசாயிகளின் கடினமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன். புதிய சட்டங்களை அமல்படுத்திய பின்னர், நாடு முழுவதும் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். சில மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அடிப்படை ஆதார விலை இருக்காது என அரசியல் காரணங்களுக்காக பொய்யுரை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை மாறப்போவதில்லை.


latest tamil news


வேளாண்துறையில் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமிடும் விதத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த சட்டங்கள், கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் விவசாயிகளை செயல்பட வைக்கும். கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அரசு விவசாயிகளுக்காக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை எங்கு வேண்டுமானாலும் விற்க அரசு, கூடுதல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X