பொது செய்தி

இந்தியா

அந்த, 'பணி'யை, அ.தி.மு.க., இப்போது செய்வதாக, வெளியே பேசிக் கொள்கின்றனரே...

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு, தி.மு.க., அரசு மட்டுமே. கருணாநிதி குடும்பமே, தமிழகத்தை சுரண்டியது. அவர்களுக்கு, அ.தி.மு.க., அரசை குற்றம் கூற தகுதி கிடையாது.- அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்'அந்த, 'பணி'யை, அ.தி.மு.க., இப்போது செய்வதாக, வெளியே பேசிக் கொள்கின்றனரே...' என, ஜாடை மாடையாக சொல்லத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்
அந்த, 'பணி'யை, அ.தி.மு.க., இப்போது செய்வதாக, வெளியே பேசிக் கொள்கின்றனரே...

ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு, தி.மு.க., அரசு மட்டுமே. கருணாநிதி குடும்பமே, தமிழகத்தை சுரண்டியது. அவர்களுக்கு, அ.தி.மு.க., அரசை குற்றம் கூற தகுதி கிடையாது.
- அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்


'அந்த, 'பணி'யை, அ.தி.மு.க., இப்போது செய்வதாக, வெளியே பேசிக் கொள்கின்றனரே...' என, ஜாடை மாடையாக சொல்லத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டி.



டில்லி விவசாயிகள் போராட்டத்தில் இடதுசாரிகளும், தேசத்துக்கு எதிரான சக்திகளும் ஊடுருவி உள்ளன. போராட்டத்தை அவர்கள் தவறாக வழி நடத்துவதாலும், போராட்டத்தில் அரசியல் பின்னணி உள்ளதாலும், எங்களின் கிசான் சங்கம் பங்கேற்கவில்லை.
- பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலர் பெருமாள்


'நீங்கள் சேர்ந்திருந்தாலும், பிற கோஷ்டிகள் உங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருப்பர்; அந்த அளவுக்கு தீவிர கொள்கையாளர்களாக உள்ளனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலர் பெருமாள் பேட்டி.



தமிழக மீனவர்கள் மீது, கடந்த பல ஆண்டுகளாகவே, இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடக்கிறது. மத்திய அரசு, உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் வாயிலாக, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும்.
- த.மா.கா., தலைவர் வாசன்


'பிரச்னைக்கான காரணத்தை ஆராயாமல், அறிக்கை விடுவதால் பலனில்லை. அதனால் தான், காலம் காலமாக இந்த பிரச்னை நீடிக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.



அ.தி.மு.க., கூட்டணியில், எங்கள் கட்சி உள்ளது. வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும். மூன்றாவது அணி அமைந்தால், அது எங்கள் தலைமையில் தான் அமைய முடியும்.
- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்


latest tamil news




'எங்கள் தலைமையில் மூணாவது அணின்னு, ஆளாளுக்குச் சொல்லிக்கிட்டிருக்கீங்க... அப்படின்னா, ஏகப்பட்ட அணிகள் ஆயிடுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளது. எங்கள் கட்சிக்கு, 15 தொகுதிகள் சாதகமாக உள்ளன. உரிய இடங்களை நாங்கள் கேட்டுப் பெற்று, போட்டியிடுவோம்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான்


'நீங்க சொல்லிட்டீங்க... தி.மு.க., தலைவர் என்ன கணக்கு வச்சிருக்காரோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான் பேட்டி.



மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு பல நன்மைகளை தருகின்றன. ஒட்டுமொத்த நன்மையும், விவசாயிகளை சென்றடைய, அரசு துணை நிற்கும். எதிர்க்கட்சிகள், விவசாயிகளுக்கு பதில், இடைத்தரகர்களுக்கு துணை நிற்கின்றன. அவர்களால் தவறாக வழிநடத்தப்படும் விவசாயிகள் மட்டுமே, போராட்டத்தில் உள்ளனர்.
- பா.ஜ., மேலிட பார்வையாளர் ரவி


'எதிர்க்கட்சிகளால், எதையும் செய்ய முடியும் என்பதை, அவ்வப்போது அரசுக்கு காட்டி வருகின்றனர்; அரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மேலிட பார்வையாளர் ரவி பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-டிச-202012:38:01 IST Report Abuse
Matt P உங்க தம்பியும் சீக்கிரம் அரசியலுக்கு வந்திருவாரா?...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18-டிச-202020:37:40 IST Report Abuse
Vijay D Ratnam அகில இந்திய முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி மூவரும் சேர்ந்து இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் 48 தொகுதிகளை கேட்டுப்பெறலாம். இல்லாவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து களமிறங்குவோம். அல்லது கமல், காங்கிரஸ், திருமாவளவன், போன்றவர்களுடன் கூட்டணிஅமைத்து களமிறங்குவோம் என்று தாராளமாக கேட்கலாம். திமுக கொடுத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் இழப்பு திமுகாவுக்குத்தான். ஆட்சியை கனவில் கூட காணமுடியாது. திமுகவுக்கு ஆட்சி இப்போ இல்லேன்னா இனி எப்பவும் இல்லை.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-டிச-202014:42:56 IST Report Abuse
r.sundaram முரசொலி மாறனை டெல்லிக்கு அனுப்பியது திமுக/கருணாநிதி.. அவரது மறைவுக்கு பிறகு மாறன் சகோதரரை டெல்லிக்கு அனுப்பியதும் திமுகவும் கருணாநிதியும் தான். இதில் தள்ளாத வயதில் டெல்லிக்கு சென்று அந்த துறையை வாங்கி கொடுத்ததே கருணாநிதி அவர்கள்தான். இன்று மாறன் சகோதரர்கள் இவ்வளவு வசதியாக இன்று இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு முதல் காரணம் கருணாநிதி. அரசின் ஓசி டிவி கொடுக்கப்பட்டதே சன்டிவி.ஐ உத்தேசித்தே. அரசுக்கு ஒரே ஒரு செலவு. ஆனால் தமிழக மக்களுக்கு மாதாமாதம் கப்பம் கட்டுகிறார்கள் கேபிள் டிவிக்கு. இதனால் கருணாநிதி/திமுக, மாறன் சகோதர்களை பிரித்து பார்க்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X