ஈரோடு: பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றுவது குறித்து, முடிவு செய்யவில்லை என்று, மாநகராட்சி கமிஷனர் கூறினார். ஈரோட்டில், பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து, 51வது வார்டு முதலியார் காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளை காலி செய்யுமாறு, மாநகராட்சி நோட்டீஸ் வழங்கிய நிலையில், சில நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு குறியிட வந்த ஊழியர்களுடன், அப்பகுதிவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., தென்னரசுவிடம், ஆக்கிரமிப்பாளர்கள் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு கலெக்டர் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை அப்புறப்படுத்துவது குறித்து, கலெக்டருடன் பேசி முடிவு எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் எப்போது அகற்றப்படும் என இதுவரை முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE