புன்செய்புளியம்பட்டி: மார்கழி மாத விரதம் துவங்கியுள்ளதால், புன்செய்புளியம்பட்டி சந்தையில், ஆடுகள் விற்பனை மந்தமாக நடந்தது.
புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் புதன், வியாழக்கிழமை கூடுகிறது. நேற்றைய சந்தைக்கு, 110 வெள்ளாடுகள், 90 செம்மறி ஆடுகள், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஐந்து முதல் 10 கிலோ வரையிலான வெள்ளாடுகள், 2,500-5,500 ரூபாய், ஐந்து முதல், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள், 2,300-5,000 ரூபாய் வரை விலை போனது. மார்கழி மாதம் என்பதால், இறைச்சி கடைக்காரர்கள், வியாபாரிகள் வருகை குறைந்ததால், விற்பனை மந்தமாக இருந்தது. அதே சமயம் ஆடு வளர்ப்போர், வெள்ளாடு, செம்மறி ஆட்டு குட்டிகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: வழக்கமாக சந்தைக்கு, 450 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும். ஆனால், இன்று, 200 ஆடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. 20 லட்சம் ரூபாய்க்கு, வர்த்தகம் நடந்தது. மார்கழி மாதம் முடியும் வரை, விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE