பொது செய்தி

தமிழ்நாடு

வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
அரூர்: வரட்டாறு தடுப்பணைக்கு, நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், நேற்று தடுப்பணையில் இருந்து வினாடிக்கு, 156 கனஅடி உபரி நீர் இடதுகால்வாயில் செல்கிறது.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்துவிடப்படும் தண்ணீரால்,

அரூர்: வரட்டாறு தடுப்பணைக்கு, நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், நேற்று தடுப்பணையில் இருந்து வினாடிக்கு, 156 கனஅடி உபரி நீர் இடதுகால்வாயில் செல்கிறது.


தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்துவிடப்படும் தண்ணீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், நிவர் மற்றும் புரெவி புயலால் பெய்த மழையால், கடந்த, 7ல், தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.45 அடி நிரம்பி, உபரி நீர் வரட்டாற்றில் செல்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தடுப்பணைக்கு, 35 கனஅடி நீர்வரத்து வந்த நிலையில், தொடர் மழையால், நேற்று காலை, 156 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து, 156 கனஅடி உபரி நீர் இடதுகால்வாய் வழியாக, குடுமியாம்பட்டி பெரிய ஏரி மற்றும் புது ஏரிக்கு செல்கிறது. கடந்த, இரண்டு நாட்களாக பெய்த மழையால், கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி வழியாக, செல்லும் வரட்டாற்றில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X