பொது செய்தி

தமிழ்நாடு

காரிமங்கலத்தில் தனி நீதிமன்றம் அமைக்க மக்கள் வேண்டுகோள்

Added : டிச 18, 2020
Share
Advertisement
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவில், தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். காரிமங்கலம் தாலுகாவில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஏற்படும் குற்ற வழக்கு, தனிநபர் வழக்கு, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட, பல்வேறு தீர்வுகளுக்கு பாலக்கோடு மற்றும் தர்மபுரி நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் வகையில்,

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவில், தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். காரிமங்கலம் தாலுகாவில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஏற்படும் குற்ற வழக்கு, தனிநபர் வழக்கு, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட, பல்வேறு தீர்வுகளுக்கு பாலக்கோடு மற்றும் தர்மபுரி நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் வகையில், காரிமங்கலத்தில் தனி நீதிமன்றம் அமைத்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்தாண்டு சட்டசபையில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம், காரிமங்கலத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றார். இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே, காரிமங்கலத்துக்கு அறிவிக்கப்பட்ட நீதிமன்றங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X