சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு இளம் பெண்கள் மாயம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே, மலையாண்டஅள்ளியை சேர்ந்த, 17 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 13ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, பெண்ணின் பெற்றோர், மத்தூர் போலீசில் அளித்த புகாரில், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மகேந்திரன் என்பவர் மீது, சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். இதே போல், சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்த, 17

கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே, மலையாண்டஅள்ளியை சேர்ந்த, 17 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 13ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, பெண்ணின் பெற்றோர், மத்தூர் போலீசில் அளித்த புகாரில், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மகேந்திரன் என்பவர் மீது, சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். இதே போல், சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்த, 17 வயது இளம் பெண், நாமக்கல் மாவட்டம், வெப்படையில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 16ல், வீட்டில் இருந்த போது மாயமானார். இது குறித்து, சிங்காரப்பேட்டை போலீசில் பெற்றோர் அளித்த புகாரில், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தரணி சுனா, 24, என்ற வாலிபர் தன் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X