பொது செய்தி

தமிழ்நாடு

பிற மாநிலங்களுக்கு உதாரணமாக தமிழகம் உள்ளது: செங்கோட்டையன்

Added : டிச 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''பிற மாநிலங்களுக்கு, உதாரணமாக தமிழகம் விளங்குகிறது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கிருஷ்ணகிரியில் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்தார். 232 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, தொடர்

கிருஷ்ணகிரி: ''பிற மாநிலங்களுக்கு, உதாரணமாக தமிழகம் விளங்குகிறது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.


கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கிருஷ்ணகிரியில் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்தார். 232 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக முதல்வர், கல்வித்துறைக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்தியாவில், பிற மாநிலங்களுக்கு உதாரணமாக தமிழகம் விளங்குகிறது. இதை பிரதமரும் பாராட்டி உள்ளார். நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் பிரச்னைகள், பிற மாநிலங்களில் இருந்த போதும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. கல்வி முறையில், பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் தமிழகம் உள்ளது. நமது பாடத்திட்டம் தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம், வெள்ள சேதங்கள் தவிர்த்து நீரை சேமித்து வைக்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார். ராஜ்யசபா எம்.பி., முனுசாமி, முன்னாள் எம்.பி., அசோக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், மனோரஞ்சிதம், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X