பொது செய்தி

தமிழ்நாடு

காரிய சடங்கு செய்து விவசாயிகள் போராட்டம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், புயல் பாதிப்பு கணக்கீடு நடத்தாததை கண்டித்து, காரிய சடங்கு செய்து, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், நிவர், புரெவி புயலால் பெய்த மழையினால், 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து, வெங்காயம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இதுவரை பாதிப்பு குறித்து ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், புயல் பாதிப்பு கணக்கீடு நடத்தாததை கண்டித்து, காரிய சடங்கு செய்து, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், நிவர், புரெவி புயலால் பெய்த மழையினால், 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து, வெங்காயம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இதுவரை பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த, எந்த அதிகாரிகளும் வரவில்லை. மத்திய குழு வேலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு செய்யவில்லை. இதனால், திருவண்ணாமலை விவசாயிகள், தங்களுக்கு நிவாரணம் கிடைக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இதை கண்டித்து, செய்யாறு அடுத்த நாவல் கிராமத்தில், உழவர் பேரவை அமைப்பு சார்பில், காரிய சடங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X