பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளி விலை உயர்வு: கூலி குறைப்பால் தொழிலாளர்கள் அதிர்ச்சி

Added : டிச 18, 2020
Share
Advertisement
சேலம்: வெள்ளி விலை உயர்வால், ஆபரண தயாரிப்பு கூலி குறைக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சேலத்தில், செவ்வாய்ப்பேட்டை, மணியனூர், அன்னதானப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, கொண்டலாம்பட்டி உள்பட, 80 இடங்கள், புறநகரில், 50க்கும் மேற்பட்ட இடங்களில், 10 ஆயிரத்து, 550 பட்டறைகளில், 1.50 லட்சம் தொழிலாளர், வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். சேலம்

சேலம்: வெள்ளி விலை உயர்வால், ஆபரண தயாரிப்பு கூலி குறைக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


சேலத்தில், செவ்வாய்ப்பேட்டை, மணியனூர், அன்னதானப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, கொண்டலாம்பட்டி உள்பட, 80 இடங்கள், புறநகரில், 50க்கும் மேற்பட்ட இடங்களில், 10 ஆயிரத்து, 550 பட்டறைகளில், 1.50 லட்சம் தொழிலாளர், வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். சேலம் மாவட்டத்தில், மனிதர்களின் கை வண்ணத்தில் தயாரிக்கப்படும் ஆபரணங்களுக்கு, வடமாநிலங்களில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில், கடந்த நவ., 12ல், வெள்ளி கிராம், 79 ரூபாய், கிலோ, 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இந்த விலை உச்சத்தால், தொழிலாளர்களுக்கு, ஒரு கிலோ வெள்ளிக்கு, 75 கிராம் சுத்த வெள்ளி கூலியாக வழங்கப்பட்டது, 70 கிராம் ஆக குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, வெள்ளி கிலோ, 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், தொழிலாளர்களுக்கு கூலி குறைப்பை திரும்ப பெறவில்லை. இதனால், தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கட்டடம் உள்ளிட்ட இதர பணிக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து, பனங்காட்டை சேர்ந்த வெள்ளி தொழிலாளி குமார் கூறுகையில், ''கொரோனாவுக்கு பின், வெள்ளி தொழில் முடங்கியது. குறைந்தளவில் செயல்படும் பட்டறைகளில், ஆட்கள், கூலி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், வருவாயில் கடும் சரிவு ஏற்பட்டதால், வேறு வழியின்றி, மாற்றுத்தொழிலுக்கு செல்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X