திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா தீபம் ஏற்றிய மலை உச்சியில், பிராயச்சித்த அபி ?ஷகம், பரிகார பூஜை நடந்தது. திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள மலையையே, சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த, 29ல், 2,668 அடி உயர, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்தது. இந்நிலையில், மலை மேல் ஏறியதற்கு, பிராயச்சித்த பரிகார பூஜை நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, அதன் கலச நீரை, அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு சென்று, அருணாசலேஸ்வரர் சுவாமி பாதத்தில், பிராயச்சித்த அபி?ஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE