மே.வங்க தலைமை செயலர், டிஜிபிக்கு மீண்டும் சம்மன்: மம்தா எதிர்ப்பு

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ., தலைவர் நட்டா கார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மே.வங்க தலைமை செயலர் மற்றும் டிஜிபி.,க்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர்களை டில்லிக்கு அனுப்ப மறுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
Centre, Summon, Bengal Officers, Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி

புதுடில்லி: பா.ஜ., தலைவர் நட்டா கார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மே.வங்க தலைமை செயலர் மற்றும் டிஜிபி.,க்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர்களை டில்லிக்கு அனுப்ப மறுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அங்கு ஆட்சியை பிடிக்க ஆளும் திரிணமுல் காங்கிரசும், பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த வாரம், 24 பர்கனாஸ் மாவட்டத்தில் டயமண்ட் ஹார்பர் என்னும் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. குண்டு துளைக்காத கார் என்பதால் நட்டா காயமின்றி தப்பினார். கட்சி நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர். கல்வீசி தாக்குதல் நடத்தியது திரிணமுல் தொண்டர்கள் என பா.ஜ.,குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து,மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிக்கையை, கவர்னர் ஜக்தீப் தங்கார், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம் அளிக்கும்படி மே.வங்க தலைமை செயலர், போலீஸ் டிஜிபி.,க்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அவர்களை டில்லிக்கு அனுப்பி வைக்க, முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். தொடர்ந்து, ஐ.பி.எஸ்., அதிகாரிகளான போலோநாத் பாண்டே, ராஜிவ் மி்ரா, பிரவீன் குமார் திரிபாதி ஆகியோரை மத்திய அரசு பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையும் ஏற்க மறுத்த மம்தா, அவர்களை அனுப்ப முடியாது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவர்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்கும்படி, நேற்று மத்திய அரசு, கடிதம் எழுதியுள்ளது.


latest tamil news



இந்நிலையில், தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இன்று(டிச.,18) மாலை 5:30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும்படி கூறியுள்ளது. ஆனால், இதனையும் ஏற்க மறுத்துள்ள மம்தா பானர்ஜி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-டிச-202004:44:07 IST Report Abuse
J.V. Iyer மமதை பிடித்த மம்தாவுக்கு அரசியலில் கடைசி காலம். துள்ளுகிறார், சுடலையார் போல.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-டிச-202021:08:59 IST Report Abuse
Rajagopal கூடிய சீக்கிரம் மமதாவின் அரசாங்கம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி வங்காளத்தில் வரும் சாத்தியம் இருக்கிறது. தேர்தல் அவர்களுக்கு எதிராகப் போகும் நிலை வந்தால் கலவரம் செய்து சீர்குலைக்கப் பார்க்கும் சாத்தியம் இருப்பதால், அவர்களை முன்னாடியே ஆட்சியிலிருந்து துரத்தி, சாரதா சிட்பண்ட் வழக்கை முன்னிறுத்தி, வங்காள திமுகா (திருநா மூல் காங்கிரஸ்) ஆட்சிக்கு வராத படி பாஜக அரசு செய்யும்.
Rate this:
Cancel
Aegan - Damascus,அயர்லாந்து
18-டிச-202019:46:53 IST Report Abuse
Aegan தேர்தலில் பட்டி டிங்கரிங் பார்த்து மக்கள் உங்களை வெளியேற்றுவார்கள்ஆடிய ஆட்டமென்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X