தமிழ்நாடு

பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு :ஆயத்த ஆடை துறை எதிர்பார்ப்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
திருப்பூர் : பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு துவங்க, மத்திய அரசுக்கு ஆயத்த ஆடை துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு, ஐரோப்பா மிக முக்கியமான சந்தையாக உள்ளது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறியுள்ளதால், பிரிட்டன் - இந்தியா இடையே எளிதாக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.அதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்,

திருப்பூர் : பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு துவங்க, மத்திய அரசுக்கு ஆயத்த ஆடை துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு, ஐரோப்பா மிக முக்கியமான சந்தையாக உள்ளது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறியுள்ளதால், பிரிட்டன் - இந்தியா இடையே எளிதாக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.அதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள், பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு துவக்க வேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:
புத்தாண்டு முதல், புதிய வர்த்தக விதிமுறைகள், கொள்கைகளை பிரிட்டன் அமல்படுத்த உள்ளது. இதற்காக, கஸ்டம்ஸ் டெலிவெரி சர்வீஸ் (சி.டி.எஸ்.,) என்கிற புதிய மென்பொருளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்படும் பொருட்களுக்கும் கூட, பிரிட்டனில் வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பிரிட்டன் - இந்தியா இடையிலான உறவு மிகவும் பலமாக உள்ளது. வரும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அவருடன், வர்த்தக பிரிவு சார்ந்த உயர் மட்ட அதிகாரிகளும் வரும் வாய்ப்பு உள்ளது.எனவே, பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு துவக்குவதற்கான காலம் கனிந்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், பிரிட்டனுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சி பெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X