பொது செய்தி

தமிழ்நாடு

கைலாசாவுக்கு ஓசி விசா, ஓசி விமானம்: நித்தியானந்தா ‛கலகல'

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை: கைலாசா நாட்டிற்கு செல்ல ஆஸ்திரேலியாவில் இருந்து இலவச விசா, விமான வசதி, உணவு, தங்குமிடம் வழங்கி, கூட்டி செல்வதாக சாமியார் நித்தியானந்தா கூறியதே தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் டாபிக்.பல சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சிக்கியுள்ள நித்தியானந்தா சமீபத்தில் கைலாசா என்ற தனி நாட்டினை துவங்கியுள்ளதாக யூடியூப் வாயிலாக தகவல் வெளியிட்டார். கடந்த விநாயகர்
நித்தியானந்தா, கைலாசா, இலவசவிசா, விமானம், ஆஸ்திரேலியா

சென்னை: கைலாசா நாட்டிற்கு செல்ல ஆஸ்திரேலியாவில் இருந்து இலவச விசா, விமான வசதி, உணவு, தங்குமிடம் வழங்கி, கூட்டி செல்வதாக சாமியார் நித்தியானந்தா கூறியதே தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் டாபிக்.

பல சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சிக்கியுள்ள நித்தியானந்தா சமீபத்தில் கைலாசா என்ற தனி நாட்டினை துவங்கியுள்ளதாக யூடியூப் வாயிலாக தகவல் வெளியிட்டார். கடந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று கைலாசா ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டார். அதற்கான கைலாசா கரன்சியும் வெளியிடப்பட்டுள்ளது. தன்னுடைய இணைய பக்கத்தில். இது ஹிந்துக்கள் மட்டுமே வாழும் கைலாசா நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்றும் குறிப்பிட்டார். மேலும் கைலாசா நாட்டின் 300 பக்க பொருளாதார கொள்கைகளை வெளியிட்டுள்ளார். மற்றொரு நாட்டுடன் தன்னுடைய வங்கி தொடர்பாக புரிதல் ஒப்பந்தமும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


latest tamil news
கைலாஷ் இருக்கா? இல்லையா?


சென்ற வருடம் கைலாசா என்ற தனி நாட்டினை நித்தியானந்தா துவங்கிய நிலையில், அப்படி ஒரு தேசம் இருக்கிறதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டுள்ளது. 'இது எல்லைகள் இல்லாத ஒரு தனி தேசம் தங்களுடைய தேசத்தில் உரிமைகளை இழந்த ஹிந்துக்களால் உருவாகியுள்ள தேசம்' என்று நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் 'கைலாஷ்' ஈகுவாடர் அருகே டிரினிடாட் மற்றும் டோபாகோ இடையே அமைந்துள்ள தனித்தீவு என்று பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர். கைலாசாவுக்கு என தனிக் கொடியும் பாஸ்போர்ட் உள்ளது எனவும் நித்தியானந்தா அடுத்தடுத்து அதிரடி காட்டினார்.

கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க வேண்டும் என மதுரையில் இருந்த ஒருவர் கோரிக்கை வைத்ததற்கும் பதிலளித்த நித்தியானந்தா, ஹோட்டல் வைக்க அனுமதிப்பதாகவும் கூறினார். ஆனால், இதுவரையில் கைலாசா நாட்டை அவரும் காட்டியது கிடையாது, பக்தர்களும் சென்றதில்லை.

இந்நிலையில், கைலாசா நாட்டிற்கு பக்தர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக தனது யூடியூப் சேனலில் அவர் கூறியுள்ளார்.


latest tamil news

அனைத்தும் இலவசம்


வீடியோவில் அவர் கூறியதாவது: கைலாசாவுக்கு வருகை தர விரும்புபவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர். அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிட வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். வருகை தரக்கூடிய நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


latest tamil news


ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து ‛கருடா' என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர். விண்ணப்பிக்கின்ற நபர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க அனுமதி இல்லை. சிவனை வழிபடுகின்ற ஆன்மீக நோக்கத்தோடு மட்டுமே வருகை தரவேண்டும். ஒருநாள் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி. இவ்வாறு நித்தியானந்தா கூறினார்.

நித்தியானந்தாவின் இந்த அறிவிப்பால் அவரது பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒருவழியாக கைலாசா நாட்டிற்கு கூட்டி செல்ல ஒருவழி கிடைத்துவிட்டதாக நினைத்தாலும், தனி விமானத்தை இயக்கி, கூட்டி செல்வாரா, அப்படியான கைலாசா இருக்கிறதா அல்லது எல்லாம் ஒருவகை ஏமாற்றுவேலையா என்பது நித்தியானந்தாவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-டிச-202012:02:33 IST Report Abuse
Bhaskaran வத்திக்கான் தமிழகத்தை யார் ஆட்சிசெய்யணும்னு பணத்தை அள்ளிவிடறாங்க அவர்களுக்கு மாதாஜியின்ஆலோசனையுண்டு அதேபோல் கைலாஸாவிலிருந்தும் கொஞ்சம் ஹிந்துக்கட்சிகளுக்கு வந்தால் நல்லதுதானே
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-டிச-202011:09:55 IST Report Abuse
Malick Raja சிலர் நாங்கள் குணம்பெறவே மாட்டோம் ..மனநல பாதிப்பிலிருந்து மீளவே மாட்டோம் என்கிற நிலை ..பரிதாபத்திற்குரியதே .. நித்தியானந்தாவும் திமுகவாம் .. ?
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
19-டிச-202020:05:57 IST Report Abuse
பெரிய ராசு இதனால உனக்கு ஏதும் பாதிப்பா ?...
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
18-டிச-202021:34:33 IST Report Abuse
Ram ஆன்மிக அரசியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X