அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்: திரிணமுல் காங்., கலக்கம்

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரசில் இருந்து இரண்டு தலைவர்கள் விலகிய நிலையில், மற்றொரு எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து விலகியுள்ளார்.மே.வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி மற்றும் ஜிதேந்திர திவாரி
Silbhadra Datta, trinamool congress, westbengal, bjp

கோல்கட்டா: மே.வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரசில் இருந்து இரண்டு தலைவர்கள் விலகிய நிலையில், மற்றொரு எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மே.வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி மற்றும் ஜிதேந்திர திவாரி ஆகியோர் விலகினர். தங்களது விலகலுக்கான கடிதத்தை, கட்சி தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் வழங்கியுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் அமித்ஷா மேற்கு வங்கத்திற்கு செல்ல உள்ளார். அப்போது, இருவரும் , அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சுவேந்து அதிகாரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஆவார். அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் 50 பேர் இவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என தெரிகிறது. மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கடந்த மாதம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கட்சியில் இருந்தும் விலகினார். இன்னும் சில அதிருப்தியாளர்கள், ஆளுங்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., ஷில்பத்ரா தத்தாவும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், 2 நாளில் 3 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து விலகியது திரிணமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
19-டிச-202009:05:53 IST Report Abuse
natarajan s மம்தாவை AIDUF காப்பாற்றும்,
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-டிச-202004:45:59 IST Report Abuse
J.V. Iyer நல்லதே நடக்கிறது மேற்கு வங்கத்தில்
Rate this:
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
18-டிச-202021:01:56 IST Report Abuse
Dr.T.Senthilsigamani அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்: திரிணமுல் காங்., கலக்கம்.மிக நல்ல செய்தி .மேற்கு வங்காளத்தில் மம்தாபானர்ஜி ஆட்சி முடிவுக்கு வருவது மிக நல்லது .தாமரை மலரட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X