பொது செய்தி

தமிழ்நாடு

ஹாலிவுட்டில் ''சுள்ளான்'' - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : தமிழ், ஹிந்தி படங்களில் நடித்த தனுஷ் அடுத்தப்படியாக ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதை வரவேற்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதால் டுவிட்டரில் அவர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தனுஷ். இவர் அறிமுகமான சமயத்தில் இவர் நடிகரா என கேலி செய்தவர்கள் ஏராளாம். ஆனால் அதன்பின்
Dhanush DhanushEraBegins TheGrayMan, ChrisEvans

சென்னை : தமிழ், ஹிந்தி படங்களில் நடித்த தனுஷ் அடுத்தப்படியாக ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதை வரவேற்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதால் டுவிட்டரில் அவர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தனுஷ். இவர் அறிமுகமான சமயத்தில் இவர் நடிகரா என கேலி செய்தவர்கள் ஏராளாம். ஆனால் அதன்பின் தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி இன்று முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கிறார். தமிழில் நடித்தவர் ஹிந்தியில் கால்பதித்தார். அதன்பின் பகீர் என்ற பிரெஞ்ச் படத்தில் நடித்தார். இப்போது ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார்.


latest tamil news
'கேப்டன் அமெரிக்கா - தி வின்டர் சோல்ஜர், கேப்டன் அமெரிக்கா - சிவில் வார், அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவஞ்சர்ஸ் என்ட்கேம்' ஆகிய படங்களை இயக்கிய ருசோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் ஆன்டனி ருசோ, ஜோசப் ருசோ இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இவருடன், ரியான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் அனா டி அர்மாஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். 'அவஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்திற்கு திரைக்கதை எழுதிய கிறிஸ்டோபர் மார்க்கஸ், ஸ்டீபன் மெக்பீலி ஆகியோர் இப்படத்திற்கான கடைசி எழுத்து வடிவத்தை மெருகேற்றி வருகிறார்களாம். சுமார் 200 மில்லியன் யுஎஸ் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராக உள்ளதாம். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் படத்தின் கதைக்களமாம்.

இப்படத்தில் நடிப்பதைப் பற்றி தனுஷ், “நெட்பிளிக்ஸி-ன் 'தி கிரே மேன்' படத்தில், ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைவது மிகுந்த உற்சாகமாக உள்ளது. அற்புதமான ஆக்ஷன் நிறைந்த அனுபவத்தைப் பெற இப்படத்தில் பங்கு பெற மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள என்னுடைய என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. இத்தனை காலமாக என் மீது நீங்கள் செலுத்தும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil news
'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தார் தனுஷ். அதன்பின் ஹிந்திப் படங்களிலும் நடித்தார். பின்னர் 2018ல் வெளிவந்த 'தி எக்ஸ்டிரார்டனரி ஜர்னி ஆப் பகிர்' என்ற படத்தின் மூலம் உலகத் திரைப்படத்திற்குள்ளும் நுழைந்தார். அடுத்து ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தில் நுழைவதன் மூலம் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்க்க உள்ளார். ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகும் தனுஷுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் அவர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனார்.

''தனுஷ் இனி சர்வதேச நடிகர், டுவிட்டர் தனுஷின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது. எங்களின் உணர்வுகளையும், மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது தனுஷ். தமிழர்களுக்கு பெருமை சேர்க்க இருக்கும் எங்கள் அண்ணன். இது வேற லெவல் கூட்டணி'' என பலரும் தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் தனுஷின் ஹாலிவுட் பட செய்தி, #Dhanush #DhanushEraBegins #TheGrayMan, #ChrisEvans உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆகின.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Lemuria,இந்தியா
18-டிச-202021:02:03 IST Report Abuse
Raman வருங்கால முதல்வர் தனுஷ் வாழ்க அண்ணா வின் கட்சியை கலைஞர் அனுபவித்தது போல , ரஜினியின் கட்சியின் பலனை அனுபவிக்க இருக்கும் தலைவரே வாழ்க
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-டிச-202021:01:29 IST Report Abuse
Rajagopal வட சென்னை படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். தனுஷுக்கு எனது வாழ்த்துக்கள்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
18-டிச-202022:33:02 IST Report Abuse
கொக்கி குமாரு வட சென்னை. அதிக புள்ளிகள் கொண்ட சிக்கலான, மிக நேர்த்தியான கோலம். ஆனால்,கதை களம் மற்றும் வசனங்களால் குடும்பமாய் உட்கார்ந்து பார்த்து ரசிக்க இயலாத கோலம். சர்வதேச ஜெயில் மற்றும் தாதாக்களின் படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. உலகளவில் பரிசுகளை வெல்ல தகுதியான படம்....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18-டிச-202019:32:16 IST Report Abuse
Vijay D Ratnam இப்போது இருக்கும் தமிழ் நடிகர்களில் தனுஷ் ஒரு நல்ல ஃப்ளேக்சிபிளான நடிகர், எந்த நடிகரின் சாயலும் இல்லாத ஒரு நடிப்பு. புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், கொடி, வடசென்னை என்று நிறைய வெரைட்டி படங்களை கொடுக்கிறார். அதிலும் கடைசியாக வந்த அசுரன் அவர் நடிப்பின் உச்சம். தான் ஒரு அசுரன் என்று அசால்ட்டா அசத்துகிறார். அரசியல் உசுப்பேத்தல் இல்லாமல் இருந்தால் அவர் இன்னும் உயரங்களை தொடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X