குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்: பிரதமர் மோடி உறுதி

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் எனவும், இந்த சட்டத்தை கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவிக்க தேவையில்லை. நலமுடன் வாழ்ந்தால் போதும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.ம.பி., மாநில விவசாயிகள் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயிகள்
Modi, Pmmmodi, Farmers, farmlaws, பிரதமர்மோடி, விவசாயிகள், எதிர்க்கட்சிகள்,நரேந்திரமோடி

புதுடில்லி : வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் எனவும், இந்த சட்டத்தை கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவிக்க தேவையில்லை. நலமுடன் வாழ்ந்தால் போதும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

ம.பி., மாநில விவசாயிகள் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயிகள் பிரச்னையில் இரட்டை வேடம் போடும் காங்கிரஸ், முதலை கண்ணீர் வடிக்கிறது. விவசாயிகள் மீதான சுமை என்பது ஒவ்வொரு இந்திய மக்களின் மீதான சுமையாகும். குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். வர்த்தகர்கள், கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.விவசாயிகள், நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். வியாபாரிகளையும், விவசாயிகளையும் இணைப்பவையாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகளின் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளோம். கடந்த சில நாட்களாக வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கி வருகிறோம். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதங்கள் நடந்துள்ளன. வேளாண் சட்டங்கள் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டாம். நலமுடன் வாழ்ந்தால் போதும்


latest tamil news


விவசாயி தற்கொலை செய்வதை வேளாண் சட்டம் தடுக்கும். விவசாயிகளை, ஓட்டு வங்கியாக மட்டும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வருகிறது. அவர்களின் நலனை பற்றி சிந்தித்தது இல்லை.ஏமாற்ற மட்டும் செய்தன. எதிர்க்கட்சிகளால் வாக்குறுதி மட்டுமே அளிக்க முடியும். அதனை நிறைவேற்ற ஆளுங்கட்சியால் மட்டுமே முடியும். வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால், எதிர்க்கட்சிகளுக்கு என்னால் பிரச்னை ஏற்படுகிறது. வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து பொய்யான தகவலையும், வதந்தியையும் எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன.

விவசாயிகளின் மூலம் எதிர்க்கட்சிகள் போர் தொடுத்துள்ளதுடன், அவர்களின் தோளில் இருந்து தாக்குதல் நடத்துகிறது. எதிர்க்கட்சிகளின் பிரச்னை என்ன என, பலமுறை அவர்களிடம் கேட்டுள்ளேன். விவசாயிகள், தங்களது நிலத்தை இழந்து விடுவார்கள் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் உண்மை நிலையை விவசாயிகளிடம் அம்பலப்படுத்துவேன். எதிர்க்கட்சிகளின் சதிக்கு, சுவாமிநாதனின் அறிக்கை சான்றாக உள்ளது. அந்த அறிக்கையை , எதிர்க்கட்சிகள் வெகுநாட்களாக நிறைவேற்றவில்லை. அந்த அறிக்கையை மூடி மறைக்கப்பட்டது.


latest tamil news


நமக்கு உணவளிப்பவர்களாக விவசாயிகளை நாங்கள் கருதுகிறோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற காங்கிரஸ் திட்டம், விவசாயிகளிடம் செய்த மிகப்பெரிய மோசடியாகும். எத்தனை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்பாவி விவசாயிகளை, ஒரு கருவியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுகின்றன. சிறிய விவசாயிகளிடம் வங்கிக்கணக்கு இருக்காது. அவர்கள் குறித்து காங்கிரஸ் எப்போதாவது சிந்தித்துள்ளதா? விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி, காங்கிரஸ் எப்போதும் நிதியுதவி செய்ததில்லை.


காங்கிரசின் இரட்டை வேடம்


கடன் தள்ளுபடிக்கு பதில் கைது வாரண்ட்களை தான் விவசாயிகளுக்கு சென்றன. சிறிய விவசாயிகள் குறித்து காங்கிரஸ் எப்போதும் சிந்தித்தது இல்லை.காங்கிரசின் இரட்டை வேடத்தை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் சதியை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். முந்தைய காலங்களில், விவசாயிகளுக்கு தேவையான உரம் கிடைத்தது கிடையாது. மாறாக, அவை கள்ளச்சந்தையில் விற்கப்பட்டன. விவசாயிகளை புறக்கணித்தவர்கள், தற்போது அரசியல் செய்கிறார்கள். உரத்திற்காக விவசாயிகள் சந்தித்த பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். கள்ளச்சந்தையில் உரம் விற்பனை செய்யப்படுவதை தடுத்துள்ளோம்.

உர விற்பனையில் ஊழலை ஒழித்துள்ளோம். உரம் கொள்முதலுக்கு நீண்ட நாட்கள் காத்து கிடக்க வேண்டிய முறையையும் நீக்கியுள்ளோம். நாடு முழுவதும் இயற்கை உரம் தயாரிக்கும் ஆலைகளை அமைத்துள்ளோம். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு உதவுவதை எதிர்க்கட்சிகள் எது தடுக்கிறது. பொய் வாக்குறுதிகள் அளிப்பதை மட்டும் எதிர்க்கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திட்டங்கள் நீண்ட நாட்களாக இழுத்து கொண்டன. வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளுக்கு சூரிய மின்சக்தியில் இயங்கும் பம்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், குறைந்தபட்ச ஆதார விலை முன்பு போல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய காலங்களில், மண்டிகளில் குறைந்த பட்ச ஆதார விலையில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது போல், தற்போதும் தொடரும். குறைந்தபட்ச ஆதார விலை இல்லை என்பது மிகப்பெரிய பொய். சதி. எப்போதும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என விவசாயிகளுக்கு உறுதியளிக்கிறேன். அதனை நீக்கும் கேள்விக்கே இடமில்லை. எனது ஆட்சி காலத்தில் தான் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனது ஆட்சி காலத்தில், விவசாயிகளுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
19-டிச-202014:20:42 IST Report Abuse
திரு.திருராம் \லச்சம் கோடிகள்ளல கச்சா எண்ணைக்காக அன்னிய செலவாணிய கரைச்சிகிட்டு கோடி டாலர்கள்ள கடனையும் வச்சி கச்சா எண்ணை வாங்கி பெட்ரோல் 40ரூவாக்கி கூட குடுக்கலாம், ஆனா பணவீக்கம் வந்து வீக்கம் வெடிச்சிரும், அப்புறம் வெனிசுலா மாதிரி ஒரு ரொட்டி வாங்க பைநிறைய பணத்தோட போவணும், கச்சா எண்ணைக்கி வாங்குன கடனை எல்லாம் அடைச்சி, நம்ம இந்திய ரூவாலியே கச்சா எண்ணை வாங்குற அதிகாரத்தையும் நிலைநாட்டி பணவீக்கத்தையும் கட்டுக்குள்ள வச்சா, நீங்க சொம்மா வம்படியா ஊர் சுத்துறத்துக்கு பெட்ரோல் விலைய விலைகுறைக்கிணுமாம், விலைவாசி மீது தாக்கம் ஏற்படுத்தும் துறைகளில் டீசல் பெட்ரோல் மண்ணெணெய் மானியங்கள் எல்லாம் எங்கெங்கு கொடுக்கவேண்டுமோ அங்கெல்லாம் மத்திய அரசு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது (விவசாய மோட்டார் பம்ப், ரேசன் மண்ணெண்ணை, பல அரசுசார், சாரா சேவை நிறுவனங்கள் என்று எவ்வளவோ), அதையும் தூக்கி நம்ம தலைியல போட்டா பெட்ரேல் விலை 200 ஆகிடும், மாநில அரசுகள் ஏன் பெட்ரோல் டீசல் கலால் வரியை குறைக்க மறுக்கிறது, தன் மாநில மக்கள் மீது அக்கறை இருந்தால் செய்யலாமே? சும்மா பொய் திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மைனு நம்ப வச்ச காலம் எல்லாம் மலைஏறிப்போச்சு,
Rate this:
Cancel
chandramohan - madurai,இந்தியா
18-டிச-202022:59:37 IST Report Abuse
chandramohan விவசாயிகளுக்கு நலம் தரும் சட்டத்தை பிரதமர் மோடிஜி கொண்டு வந்துள்ளார். புரிந்து கொண்டு, போராடுவதை வாபஸ் பெற வேண்டும்
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
18-டிச-202022:07:10 IST Report Abuse
Mirthika Sathiamoorthi உஷ்ஷ்ஹ்ஹ்ஹ அப்பா இன்னொரு வாழைப்பழம் எதடான்னா அது இதுதான்னு சொல்றமாதிரியே இருக்கு...விவஸ்யி கேப்பது வாயில் சொல்லாதீர்கள் அதை சட்டமாகுங்கள்ன்னு...மறுபடி மறுபடி வாக்குறுதிதான் கொடுக்கறாங்களே தவிர அதை சட்டமாக்க மாட்டேங்குறாங்க...அப்போதான் விவசாயிக்கு டவுட்டு ஜாஸ்தியாயிட்டே போகுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X