இந்தியாவில் குற்றம் !
* இமாசலபிரதேசத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் விதிமுறைகளை மீறி வருமான வரி செலுத்துவோருக்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நிதி ரூ.12 கோடி வழங்கிமோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே மாடு திருட வந்ததாக சந்தேகப்பட்டு ஒருவரை கும்பல் அடித்து கொன்றது.
தமிழக நிகழ்வு !
ஈமுகோழி வளர்ப்பு மூலம் அதிக வட்டி தருவதாக மோசடி செய்தி 3 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கேஜி பிரைடு என்ற ஈமுகோழி நிறுவனம் நடத்தி வந்தவர் கார்த்திக்சங்கர். இவர் இந்நிறுவனத்தில் டிபாசிட் செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக 4. 32 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவை டான்பிட் கோர்ட்டில் நீதிபதி ரவி, குற்றவாளி கார்த்திக்சங்கர், அவரது மனைவி காயத்ரி ஸ்ரீ ( பெண்போலீஸ்), சதீம்கண்ணா ஆகிய 3 பேருக்கு 10 ஆண்டு சிறையும், 2 கோடியே 15 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
* லஞ்சப்புகாரில் சிக்கியுள்ள சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் லாக்கரை திறந்து சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை புதுப்பேட்டையில் சந்தோஷ் என்பவரை அவரது நண்பர்கள் வெட்டி கொன்றனர். நண்பரின் மனைவியிடம் பேசியதால் ஆத்திரத்தில் இந்த கொலை நடந்திருக்கிறது.
*2 வழக்குகளில் சாட்சியம் அளிக்க ஆஜராகாத சேலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளுக்கு கோபி நீதிமன்றம் பிடிவாரண்ட்
* வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள செங்சிலுவை சங்க அலுவலகத்திற்கு, முறைகேடு புகார் காரணமாக சீல் வைக்கப்பட்டது.
உலக நடப்பு !
* பெரு நாட்டின் லிமாவில் போதை கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வீட்டிற்குள் நுழைந்து 4 பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE