பிரதமரின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸில் விற்க முயற்சி: 4 பேர் கைது

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
வாரணாசி: பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் உள்ள அவரது தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ்.,-ல் ரூ.ஏழரை கோடிக்கு விற்பதாக விளம்பரம் வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை மர்ம நபர்கள் போட்டோ எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்., என்னும் இணையதளத்தில், ரூ. 7
PMModi, Office, Varanasi, Sale, OLX, PoliceArrest, PostingAD, பிரதமர், மோடி, அலுவலகம், வாரணாசி, ஓஎல்எக்ஸ், விற்பனை

வாரணாசி: பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் உள்ள அவரது தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ்.,-ல் ரூ.ஏழரை கோடிக்கு விற்பதாக விளம்பரம் வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை மர்ம நபர்கள் போட்டோ எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்., என்னும் இணையதளத்தில், ரூ. 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என, விளம்பரம் செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை கொண்டு, நடத்தப்பட்ட விசாரணையில், தவறான ஐடி கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.


latest tamil news


இதையடுத்து, அந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், குஜராத்தில் உள்ள பிரமாண்டமான 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் ஒருவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
19-டிச-202011:37:10 IST Report Abuse
COW  URINE  SANGI வாங்கப்போவது அம்பானியை இல்ல அடானிய ,
Rate this:
Cancel
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
19-டிச-202010:39:00 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி பிரதமர் அலுவலகம் மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்களை விற்பவர்களுக்கும் லாடம் கட்டவேண்டும்...😷
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
19-டிச-202012:06:05 IST Report Abuse
கொக்கி குமாரு பொதுத்துறை நிறுவனங்கள் லட்சம் கோடிகளில் நஷ்டம் அடைவதற்கு காரணமான காங்கிரஸ் + திருட்டு திமுகவிற்கு என்ன கட்டலாம்?...
Rate this:
Cancel
19-டிச-202009:41:47 IST Report Abuse
தமிழ் ஒருத்தர் நாட்டையே தனியாருக்கு விற்க முயற்சிபண்ணிட்டு இருக்காரு.இவனுங்க ஒரே ஒரு கட்டடத்தைத்தானே விற்பனைக்குன்னு சொன்னானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X