பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி

Added : டிச 18, 2020
Share
Advertisement
நாமக்கல்: மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் நடந்தது. நாடு முழுவதும் டிச., 14 முதல், 20 வரை மின்சார சிக்கன வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், நாமக்கல்லில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம்

நாமக்கல்: மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் நடந்தது. நாடு முழுவதும் டிச., 14 முதல், 20 வரை மின்சார சிக்கன வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், நாமக்கல்லில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர். மின் கோட்ட அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியானது, பிரதான சாலைகள் வழியாக சென்று, மீண்டும் கோட்ட அலுவலகத்தில் நிறைவடைந்தது. அதில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி, நாமக்கல் மின் திட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம், மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வினியோகித்தும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், வாசகங்களை முழங்கியும் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X