நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதற்கிடையே, அன்று இரவு ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று காலை 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு (மில்லி மீட்டரில்): எருமப்பட்டி, 20, கொல்லிமலை, 18, சேந்தமங்கலம், 17, ராசிபுரம், 17, நாமக்கல், 12, மங்களபுரம், 10, கலெக்டர் அலுவலகம், 9, மோகனூர், 9, ப.வேலூர், 6, புதுச்சத்திரம், 5, திருச்செங்கோடு, 3, குமாரபாளையம், 1. மாவட்டத்தின் மொத்த மழையளவு, 127 மி.மீ., நாமக்கல் நகரில் நேற்று அதிகாலை முதலே இடைவிடாது சாரல்மழை பெய்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE