நாமக்கல்: நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழிப்பாதையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல், கோட்டை சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது. அங்கு சேலம், ராசிபுரம், திருசெங்கோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திருச்சி, கரூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் செல்கின்றன. அந்த சாலையில், உழவர் சந்தை, மாவட்ட மைய நூலகம், நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. அந்த சாலை குறிப்பிட்ட அகலம் மட்டுமே உள்ளதால், அடிக்கடி போக்குவத்து பாதிக்கப்படுகிறது. அவசர கதியில் செல்லும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், திருச்செங்கோடு, ராசிபுரம், சேலம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள், உழவர் சந்தை எதிரே பொய்யேரிக்கரை, புதிய சர்வீஸ் சாலை, நல்லிபாளையம் வடக்கு அரசு பள்ளி அருகே திருச்செங்கோடு சாலையில் சென்றடையும் வகையில் பிரித்தனுப்ப வேண்டும். அதேபோல், கோட்டை சாலையில் இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில், இரும்பு தகடு அமைக்க வேண்டும். அவ்வாறு சாலை போக்குவரத்தை சீரமைத்தால், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE