இந்திய அணி பவுலர்கள் கலக்கல்: அஷ்வின் ‛நான்கு' விக்கெட்

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெற்றது. நமது பவுலர்கள் போட்டுத் தாக்க, முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு சுருண்டது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர் - கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில்
indvsaus, ashwin, india, australia,

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெற்றது. நமது பவுலர்கள் போட்டுத் தாக்க, முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர் - கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. சகா (9), அஷ்வின் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news


இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை கம்மின்ஸ் வீசினார். இதன் 3வது பந்தில் அஷ்வின் (15) அவுட்டானார். மறுபக்கம் நேற்று தனது முதல் பந்தை சந்தித்த சகா (9), தேவையில்லாமல் அவுட்டானார். கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆறுதல் தந்தார் உமேஷ். இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஸ்டார்க் பந்தை சிக்சருக்கு அனுப்ப ஆசைப்பட்ட இவர், 6 ரன்னுக்கு கிளம்பினார். முகமது ஷமியும் (0) முதல் பந்தில் வீழ்ந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க் 4, கம்மின்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர்.


அஷ்வின் அபாரம்


ஆஸ்திரேலிய அணிக்கு பர்ன்ஸ், மாத்யூ வேட் ஜோடி துவக்கம் கொடுத்தது. பும்ரா 'வேகத்தில்' வேட் (8 ரன், 51 பந்து), பர்ன்ஸ் (8) அவுட்டாகினர். லபுசேன், ஸ்மித் இணைந்தனர். அஷ்வின் சுழலில், அபாய ஸ்மித் (1), டிராவிஸ் ெஹட் (7) சிக்கினர். அஷ்வின் பந்தில் வேகமாக ரன்கள் சேர்க்க முயன்ற கேமரான் கிரீனை (11), தனது 'டைவ்' கேட்ச்சால் வெளியேற்றினார் கோஹ்லி. கேப்டன் டிம் பெய்ன், லபுசேன் இணைந்து அணியை மீட்க முயற்சித்தனர். தனது 13வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ், லபுசேன் (47), கம்மின்சை (0) அவுட்டாக்கி அசத்தினார். மிட்சல் ஸ்டார்க் (15) ரன் அவுட்டானார். பெய்ன், அரைசதம் எட்டினார். லியான் (10), ஹேசல்வுட் (8) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, உமேஷ் யாதவ் 3, பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினர்.


latest tamil news



முதல் இன்னிங்சில் பெற்ற 53 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தது. பிரித்வி 4 ரன் எடுத்து போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மயங்க் அகர்வால் (5), 'நைட் வாட்ச்மேன்' பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-டிச-202020:18:53 IST Report Abuse
raghasrin பிருத்திவீ பேட்டிங்கும் சரியில்லலை பீல்டிங்கும் ரியில்லை.அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பவும்
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
18-டிச-202017:20:01 IST Report Abuse
Swaminathan Chandramouli ஆனால் வழக்கம் போல இரண்டாவது இனிங்சில் துவக்க வீரர் ப்ரித்விஷா நான்கு ரன்கள் எடுத்து அவுட் ஆனார் . பரவாயில்லை முதல் இன்னிங்சில் பூஜ்யம் இரண்டாவது இன்னிங்சில் நான்கு ரன்கள் . கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது ஆனால் அடுத்த இரண்டாவது டெஸ்டில் வாட்டர் பாய் தான் இந்த பைய்யன் மண்டைக்கனம் பிடித்தவன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X