சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பழமையான நெல்உலகின் பழமையான, பெரிய நெல் சீனாவின் ஜெஷியாங் மாகாணத்தில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது 6300 ஆண்டுகளுக்கு முன் 222 ஏக்கரில் இவ்வகை நெல் பயிரிடப்பட்டிருந்தன. இது விஞ்ஞானிகள் கண்டறிந்த போது, முதலில் இருந்ததை விட, மூன்று மடங்கு மாறியிருந்தது. விளைந்த நெல்லை, நவீன கருவிகள் இல்லாமல், கைகளால் அறுவடை செய்திருக்கின்றனர்.

அறிவியல் ஆயிரம்
பழமையான நெல்

உலகின் பழமையான, பெரிய நெல் சீனாவின் ஜெஷியாங் மாகாணத்தில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது 6300 ஆண்டுகளுக்கு முன் 222 ஏக்கரில் இவ்வகை நெல் பயிரிடப்பட்டிருந்தன. இது விஞ்ஞானிகள் கண்டறிந்த போது, முதலில் இருந்ததை விட, மூன்று மடங்கு மாறியிருந்தது. விளைந்த நெல்லை, நவீன கருவிகள் இல்லாமல், கைகளால் அறுவடை செய்திருக்கின்றனர். உலகளவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சீனாவில் ஆண்டுக்கு 14.85 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது இடத்தில் இந்தியா (11.64 கோடி மெட்ரிக் டன்) உள்ளது.

தகவல் சுரங்கம்
நுாற்றாண்டு பல்கலை

உ.பி.,யின் அலிகாரில் செயல்பட்டு வந்த முகமது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லுாரி, 1920 டிச. 1ல் அலிகார் முஸ்லிம் பல்கலையாக மாறியது. இந்தியாவில் உள்ள முக்கியமான மத்திய பல்கலையில் ஒன்று. இதற்கு கேரளாவின் மலப்புரம், மேற்குவங்கத்தின் முஷிதாபாத், பீஹாரின் கிஷான்கஞ்ச் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இப்பல்கலையில் 300 பாடப் பிரிவுகள் உள்ளன. 1155 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 22,391 மாணவர்கள் படிக்கின்றனர். நுாலகம், விடுதி, பல்வேறு வகை விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கம், உணவு விடுதி போன்ற வசதிகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X