பொது செய்தி

இந்தியா

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைபடி உயர்வு

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது.அதற்காக மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டதால் நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல்வேறு
அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைபடி உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது.

அதற்காக மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டதால் நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.


latest tamil news



அதன்படி அரசு ஊழியர்கள் மற்றம் ஒய்வூதிய தாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை வரை அந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. எனவே பழையபடி 17 சதவீத அகவிலைபடி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் அகவிலைபடியை 17 சதவீதத்தில் இருந்த 21 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அரசு ஊழியர்களும் , ஒய்வூதியதாரர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
19-பிப்-202110:35:32 IST Report Abuse
Vaiyapuri Rajendran நடுவண் அரசின் ஓய்வூதியர்களுக்கு கணிசமான அளவில் ஓய்வூதியம் மற்றும் பல சலுகைகள் அரசு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது...இதில் பெரும்பாலானவர்கள் தங்களின் பணிக்காலத்தில் தாங்கள் பெற்ற நிகர சம்பளத்தை காட்டிலும்( they are getting pension more than that of carry home salary )சற்று கூடுதலாக ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் பராமரிப்பு நலன் கருதி அரசின் கருணை வரவேற்க வேண்டும்...அதே சமயத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக சேர்ந்து சந்தா செலுத்தி பணி நிறைவு பெற்று 2000 ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொள்ள இயலாத நிலையில் உள்ள அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நடுவண் அரசின் கவனத்தில் கொள்ள வேண்டும்... மூத்தகுடி மக்கள் அனைவரும் இந்த நாட்டின் சொத்து என்றும் அவர்களை பேணி காப்பது அரசின் கடமை என்றும் நமது பிரதமர் அவர்கள் அரசு விழாக்களில் உரை நிகழ்த்தி வருகிறார்...ஆனால் வருங்கால வைப்பு நிதி நிறுவனமும் நடுவண் அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் அவர்கள் இந்த மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்க வேண்டிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது...கணிசமான தொகை ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசு தற்போது பணியில் உள்ளவர்கள் 15000 ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களின் நலனில் அக்கறை உள்ள அரசு அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி சந்தா தொழிலாளர் பங்களிப்பு நிர்வாகத்தின் பங்களிப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து 24 சதம் அதாவது ஒரு ஊழியருக்கு மாதம் ஒன்றுக்கு 15000 X12+12=3600 ரூபாய் வழங்க அதாவது ஆண்டுக்கு 3600X12=43200 வழங்க மனம் உள்ள அரசு வறுமையில் உள்ள மூத்த குடிமக்கள் 2000 ரூபாய்க்கு குறைவாக ஓய்வூதியம் பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொள்ள இயலாத நிலையில் உள்ளவர்களை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்...நடுவண் அரசும் நிதி அமைச்சகமும் பிரதமர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வேண்டுகிறேன்... தமிழ் நாட்டில் உள்ள பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ( Superannuation Member Pensioners ) வருங்கால வைப்பு. நிதியில் ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் சார்பாக.....
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
20-டிச-202009:25:08 IST Report Abuse
karutthu ஒரே நாடு ஒரே ரேஷன் ஒரே நம்பரில் காஸ் சிலிண்டர் பதிவு என கூறும் பி ஜே பி ஒரே கிரேடு ஒரே பென்சன் என ஏன் அறிவிக்காமல் இருக்கிறது ?
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
19-டிச-202013:10:11 IST Report Abuse
Rajarajan தனியார் ஊழியருக்கு பஞ்ச படி எங்கே உண்டு ?? அவர்கள் பிழைக்கின்றனரே ?? பிறகு, விலைவாசி மட்டும், அரசு ஊழியருக்கு, தனியார் ஊழியருக்கு பொதுவில் இருப்பது ஏன் ?? மீண்டும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தாலோ, பெட்ரோல் / டீசல் விலை உயர்ந்தாலோ, காய்கறி மற்றும் வேறு பொருளின் விலை உயர்ந்தாலோ, இதுதான் முக்கிய காரணமாக இருக்கும். அரசு ஊழியருக்கு போனஸ் கொடுத்ததின் விளைவு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு. பொருளாதாரத்தை சரிசமமாக வைக்க, அரசு நிறுவனங்களை, தனியார் ஆக்குவது தான் சரி. பூனைக்கு யார் மணி கட்டுவது ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X