தீயாக பரவியது வைரஸ்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Updated : டிச 20, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி :'வழிமுறைகளை முறையாக செயல்படுத்தாததால், கொரோனா வைரஸ், காட்டுத் தீயைப் போல வேகமாக பரவியது' என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் நேற்று சில கருத்துக்களை முன்வைத்தது. இது குறித்து, நீதிபதிகள், அசோக் பூஷன், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில்
தீயாக பரவியது வைரஸ்:உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி :'வழிமுறைகளை முறையாக செயல்படுத்தாததால், கொரோனா வைரஸ், காட்டுத் தீயைப் போல வேகமாக பரவியது' என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் நேற்று சில கருத்துக்களை முன்வைத்தது. இது குறித்து, நீதிபதிகள், அசோக் பூஷன், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால், உலக மக்கள் அனைவரும், பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது, உலகப் போரைப் போன்றது.

ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு, பல நாட்கள் முன்பேயே, அது குறித்து மக்களுக்கு தெரிவித்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால், மக்கள் அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து, ஊரடங்குக்கு தயாராக இருந்திருப்பார்கள்.

கொரோனா வைரசை எதிர்கொள்ள பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளை, முறையாக செயல்படுத்தாததால், வைரஸ், காட்டுத் தீயைப் போல வேகமாக பரவியது.கடந்த எட்டு மாதங்களாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சோர்ந்துவிட்டனர். அவர்களுக்கு இடைக்கால ஓய்வு வழங்கப்படவேண்டும்.இந்த கொரோனா காலத்தில், மத்திய அரசுடன் இணைந்து, அனைத்து மாநில அரசுகளும் ஒற்றுமையுடன் பணியாற்றவேண்டும். குடிமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு, முன்னுரிமை வழங்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-டிச-202021:33:57 IST Report Abuse
Rasheel கண்ணாடி ரூம்ல கல் எரியறான் யோக்கியன்
Rate this:
Cancel
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-202013:46:16 IST Report Abuse
Susil Kumar அரசை மட்டும் குற்றம் சொல்வது சரி இல்லை, அரசு ஒரு உத்தரவு போட்டால் அதை கடைபிடிக்காமல் போராட்டம் பண்ண ஒரு கூட்டம், அதற்கு சப்போர்ட் பண்ண சில கட்சிகல் , பிறகு நோய் பரவி விட்டது என்று அரசையே குறை சொல்வது , இது எதுவும் தெரியாத மாதிரி அரசை குறை சொல்ல நீதிமன்றம். என்ன சொல்ல இந்த ஜனநாயகத்தை , இப்போது கூட மாஸ்க் யாரு போடுறான்.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
19-டிச-202012:42:30 IST Report Abuse
வல்வில் ஓரி என்ன ஐயா ராகுல் அவர்கள் ஏன் MAR மாதமே AIRPORT இல் செக் செய்ய வில்லை என்று கேட்டதிற்கு அவரை தேசத்துரோகி என்று எல்லாம் சொல்லிவிட்டோம் அப்புறம் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X