சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கூஜா துாக்க முடியாது!

Added : டிச 18, 2020
Share
Advertisement
கூஜா துாக்க முடியாது!'முதல்வர் பதவியிலிருக்கும் என்னை ஏன் சீண்டி பார்க்கின்றனர்' என, புலம்புகிறார், ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சிக்கு சகலமுமாக திகழ்ந்தவர் அகமது படேல். கட்சியின் பொருளாளர், சோனியாவின் அரசியல் ஆலோசகர், நிதி திரட்டுபவர், உட்கட்சி பூசல்களுக்கு பஞ்சாயத்து செய்பவர், என, திரைமறைவு அரசியலின்

அக்கம் பக்கம்

கூஜா துாக்க முடியாது!


'முதல்வர் பதவியிலிருக்கும் என்னை ஏன் சீண்டி பார்க்கின்றனர்' என, புலம்புகிறார், ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சிக்கு சகலமுமாக திகழ்ந்தவர் அகமது படேல். கட்சியின் பொருளாளர், சோனியாவின் அரசியல் ஆலோசகர், நிதி திரட்டுபவர், உட்கட்சி பூசல்களுக்கு பஞ்சாயத்து செய்பவர், என, திரைமறைவு அரசியலின் தில்லாலங்கடியாக திகழ்ந்தவர். சமீபத்தில் கொரோ னா பாதிப்பு காரணமாக, அவர் காலமானார். அவரது மறைவு, சோனியா, ராகுல் போன்றோருக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இதையடுத்து, காங்கிரசின் திரைமறைவு வேலைகளை செய்வதற்கு சரியான தலைவரை, கட்சி மேலிடம் தேடி வருகிறது.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் தான், கட்சி மேலிடத்தின் இறுதிப் பட்டியலில் உள்ளனர்.
இந்த விஷயம் தெரிந்ததுமே, அசோக் கெலாட்டுக்கு உதறல் எடுத்துள்ளது. 'ஏற்கனவே, என் முதல்வர் பதவியை காலி செய்ய, சச்சின் பைலட் காத்திருக்கிறார்.

இந்த நேரம் பார்த்து, அவருக்கு உதவுவது போல், என்னை டில்லிக்கு அழைக்கின்றனரே' என, கதறுகிறார். கெலாட் ஆதரவாளர்களோ, 'முதல்வர் என்றால், ஒரு மாநிலத்துக்கே ராஜா போல், ஏக போக செல்வாக்குடன் வலம் வரலாம். இந்தப் பதவி சுகத்தை விட்டு, கட்சி மேலிடத் தலைவர்களுக்கு கூஜா துாக்கும் வேலையை செய்ய, தலைவருக்கு ஆசை வருமா... அதனால் தான், இப்படி கொந்தளிக்கிறார்' என்கின்றனர்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X