சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வேட்பாளர்கள் தேர்வில் முதல்வர் கறார்!

Added : டிச 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வேட்பாளர்கள் தேர்வில் முதல்வர் கறார்!''நாயரே, ஏலக்காய் டீ போடுங்க...'' என குரல் கொடுத்தபடியே, பெஞ்சில் அமர்ந்த அன்வர்பாய், ''கூட்டணிக்கு போயிட்டா, கமுக்கமா இருந்துடுவாங்கன்னு சொல்றாங்க பா...'' என, மேட்டருக்கு வந்தார்.''கமுக்கமா இருக்கப் போறது யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னையை ஒட்டியிருக்கிற திருவொற்றியூர் தொகுதியை, தி.மு.க.,
 டீ கடை பெஞ்ச்


வேட்பாளர்கள் தேர்வில் முதல்வர் கறார்!



''நாயரே, ஏலக்காய் டீ போடுங்க...'' என குரல் கொடுத்தபடியே, பெஞ்சில் அமர்ந்த அன்வர்பாய், ''கூட்டணிக்கு போயிட்டா, கமுக்கமா இருந்துடுவாங்கன்னு சொல்றாங்க பா...'' என, மேட்டருக்கு வந்தார்.
''கமுக்கமா இருக்கப் போறது யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையை ஒட்டியிருக்கிற திருவொற்றியூர் தொகுதியை, தி.மு.க., கூட்டணியில, சமத்துவ மக்கள் கழகம் தலைவர் நாராயணன் கேட்கிறாரு... அதுபோக, மார்க்சிஸ்ட் கட்சியும், இந்த தொகுதிக்கு துண்டு போட்டு வச்சிருக்குது பா...
''அ.தி.மு.க., தரப்புல, பா.ஜ.,வினர் கேட்கிறாங்களாம்... ரெண்டு பெரியக் கட்சிகளும், தொகுதியை கூட்டணிக்கு தள்ளி விட்டுட்டா, திராவிடக் கட்சியினர் இந்தத் தொகுதி தேர்தல் பணிகள்ல, தீவிரம் காட்ட மாட்டாங்களாம் பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஒரு லட்சம் புத்தகங்கள் அடிச்சு வழங்க போறாங்க...'' என, அடுத்தத் தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.
''ஏதாவது கதை புஸ்தகமா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''இல்லைங்க... தமிழகப் போக்கு வரத்துத் துறையில, வாகனங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டுறது, ஜி.பி.எஸ்., கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் வாங்குனதுல முறைகேடு நடந்துட்டதா, தி.மு.க., தரப்புல, ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர்கள் நேரு, செந்தில் பாலாஜி எல்லாம் குற்றம் சாட்டிட்டு இருக்காங்க...
''ஜெயலலிதா ஆட்சியில, போக்குவரத்து அமைச்சரா இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.,வின் நேரு அந்தத் துறைக்கு அமைச்சரா இருந்தப்ப, செய்த முறைகேடுகளை பட்டியல் போட்டு, சட்டசபையில பேசினார்... அப்ப, 'நேரு முறைகேடுகளை புத்தகமாவே போடலாம்'னு சொன்னாருங்க...
''இப்ப, ரெண்டு பேருமே ஒரேக் கட்சியில இருக்காங்க... அதனால, வர்ற தேர்தல்ல, செந்தில் பாலாஜி, நேரு போட்டியிடும் தொகுதிகள்ல, நேரு முறைகேடு விபரங்களை, ஒரு லட்சம் புத்தகங்களா அச்சடித்து, வினியோகிக்க, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.உடனே, ''அமைதிக்கு பின்னாடி, ஆயிரம் அர்த்தம் இருக்காமுல்லா...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார், அண்ணாச்சி.
''யார் அமைதியா இருக்கா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க., தரப்புல, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்'னு தேர்தல் பிரசாரத்தைத் துவங்கி நடத்திட்டு இருக்காங்கல்லா... அ.தி.மு.க., தரப்புல, இதுவரை எந்தத் தேர்தல் வேலைகளும் துவங்கலை... ஆனா, அவங்க ரகசியமா சில வேலைகளை செஞ்சிட்டு இருக்காவ வே...
''இந்த முறை வேட்பாளர் தேர்வுக்கு, அதிக முக்கியத்துவம் தரப் போறாவ... கெட்டப் பெயர் வாங்காத இளம் தலைமுறையினருக்கு அதிகமா, 'சீட்' தரப் போறாவ வே... எல்லாத்துக்கும் மேலா, உளவுத் துறையும், எந்தந்த தொகுதியில, யாரை நிறுத்தினா வெற்றி வாய்ப்பு இருக்கும்னு, ஒரு அறிக்கையை தயார் பண்ணிட்டு இருக்குவே...
''அனைத்து வகையிலயும், தகுதி வாய்ந்த வேட்பாளர்களையே நிறுத்தணும்கிறதுல, முதல்வர் ரொம்பவே கறாரா இருக்காரு... சிபாரிசுகளை ஓரம் கட்டவும் முடிவு பண்ணியிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.
விவாதம் முடிய, பெரியவர்கள் ஜமா கலைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
19-டிச-202015:23:35 IST Report Abuse
karutthu அதிருப்தி எல்லாம் சின்ன அம்மா பக்கம் போய்டுமோ ? அதனுடன் ஸ்லீப்பிங் செல்லும் போய்டும் ???
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-டிச-202006:29:17 IST Report Abuse
D.Ambujavalli எல்லாம் இப்போது அமர்க்களமாகப் பேசலாம். ‘என் பையனை/ பெண்ணை’ நிறுத்தினால் நாலு தொகுதிக்கு செலவழிப்பேன்’ என்று வருவார்கள். அப்படியே கறார், கொள்கை எல்லாம் மாறிவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X