டிச., 19, 1922
திருவாரூர் மாவட்டத்திலுள்ள, காட்டூர் கிராமத்தில், 1922 டிச., 19ம் தேதி பிறந்தவர், க.அன்பழகன். இயற்பெயர், ராமையா. சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 75 ஆண்டு கால நண்பராக இருந்தார்.'தமிழர் திருமணமும் இனமானமும், தமிழ்க்கடல்' உட்பட, 20க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். சிறந்தப் பேச்சாளராகவும் விளங்கினார். ஒன்பது முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு முறை, எம்.பி.,யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தி.மு.க., அமைச்சரவையில் நிதி, கல்வி, சுகாதாரம், சமூக நலம் என, பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1977 முதல், தான் இறக்கும் வரை, தி.மு.க.,வின் பொதுச் செயலராக இருந்தார். 2020 மார்ச், 7ம் தேதி, தன், 97வது வயதில் காலமானார்.பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE