கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கர்ணனுக்கு ஜாமின் மறுப்பு

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை :நீதிபதிகள் குறித்து, வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமின் மனு, மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்கு வங்க நீதிமன்றங்களில், நீதிபதியாக பணிபுரிந்தவர், கர்ணன். இவர், நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.இது குறித்து, வழக்கு பதிவு செய்த, மத்திய
கர்ணனுக்கு
 ஜாமின் மறுப்பு

சென்னை :நீதிபதிகள் குறித்து, வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமின் மனு, மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்கு வங்க நீதிமன்றங்களில், நீதிபதியாக பணிபுரிந்தவர், கர்ணன். இவர், நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.இது குறித்து, வழக்கு பதிவு செய்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார், டிச., 2ல், கர்ணனை கைது செய்தனர். இதையடுத்து, ஜாமீன் கோரி, சென்னை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


latest tamil news



இந்நிலையில், ஜாமீன் கேட்டு, சென்னை அமர்வு நீதிமன்றத்தில், கர்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் ஆஜரான, முதன்மை அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன், கர்ணனுக்கு ஜாமீன் வழங்க, கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, கர்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.shanmugasundaram - trichy,இந்தியா
19-டிச-202015:38:42 IST Report Abuse
k.shanmugasundaram பெண் ஊடகவியலாளர்களை தரக்குறைவாகப் பேசிய எஸ் வி சேகர் மீதும், எச். ராஜா மீதும் நீதிமன்றம் எந்த கடின நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிபதி கர்ணன் அவர்களை கொலைக் குற்றவாளியை போல் நீதிமன்றம் நடத்துகிறது. ஆளுக்கேற்றார்போல் பஞ்சாயத்து.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-202015:19:43 IST Report Abuse
Tamilan ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதிக்கே ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் . அதுவும் ஒரு கருத்து சுதந்திரத்திற்கு எதிராக .
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
19-டிச-202015:06:37 IST Report Abuse
r.sundaram தான் ஒரு தலித் என்பதால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம், பயமுறுத்தலாம் என்ற எண்ணம் வரக்கூடாது. இவரை தகுந்தபடி தண்டிக்காமல் விட்டால் மற்றவர்களுக்கு முன் உதாரணம் ஆகிவிடக்கூடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X