அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தடையை மீறி ஸ்டாலின் உண்ணாவிரதம்

Updated : டிச 20, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை : போலீஸ் தடையை மீறி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம், சென்னையில், நேற்று நடந்தது.வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, 23 நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற, உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதற்கு,
போலீஸ் தடையை மீறி

சென்னை : போலீஸ் தடையை மீறி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம், சென்னையில், நேற்று நடந்தது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, 23 நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற, உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதற்கு, போலீஸ் அனுமதி வழங்கவில்லை. போலீஸ் தடையை மீறி நடந்த போராட்டத்திற்கு, ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சந்திக்க தயார்ஸ்டாலின் பேசியதாவது: வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட உடன், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று வேளாண் சட்டங்களையும், மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.

போராடுபவர்களை, தேச விரோதிகள், கைக்கூலிகள் என, மத்திய அரசு சொல்கிறது. மாவோயிஸ்ட், பயங்கரவாதிகள் என, விமர்சிக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிற வரையில், போராட்டங்கள் தொடரும். வேறு கட்டங்களில், அவற்றை முடிவு செய்து நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

விவசாயிகள் போராட்டத்தில், 21 பேர், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் இறந்துள்ளனர்.

அவர்களுக்கு, தேசிய அளவில் விவசாய அமைப்புகள் சார்பில், வரும், 20ம் தேதி அஞ்சலி செலுத்த உள்ளனர். அதில், நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதற்காக, எந்த வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். முதல்வர் இ.பி.எஸ்., ஊர் ஊராக சென்று, மக்களை சந்திக்கவில்லை; அதிகாரிகளை சந்திக்கிறார்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில், விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு, ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. குருநானக் சத் சங்க் சபா மற்றும் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தமிழக தலைவர் ஹர்பன்சிங் தலைமையில் நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.'விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்' என்ற, வாசகத்துடன் கூடிய பச்சை நிற முகக் கவசத்தை, பலர் அணிந்திருந்தனர்.


திருநாவுக்கரசருக்கு அவமதிப்பு!இந்த போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்பார் என, முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின், முன்னாள் தலைவர் தங்கபாலு பங்கேற்பார் என, தி.மு.க.,விடம் தெரிவிக்கப்பட்டது.தங்கபாலு வரும் தகவல், திருநாவுக்கரசருக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால், காலை, 8:00 மணிக்கு, அவர் உண்ணாவிரத மேடைக்கு வந்து, முன்வரிசை நாற்காலியில் அமர்ந்து விட்டார். 8:20 மணிக்கு, ஸ்டாலின் வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தங்கபாலு, 8.40 மணிக்கு வந்தார்.

காங்கிரஸ் சார்பில், ஒருவர் அமரும் வகையில் மட்டுமே, மேடையில் நாற்காலி போடப்பட்டிருந்தது. 'ஒரே கட்சியை சேர்ந்த, இருவர் அமர முடியாது' என, திருநாவுக்கரசரிடம், தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதனால், திருநாவுக்கரசர் அதிருப்தி அடைந்தார்.
உடனே, அவரை ஸ்டாலின், தன் அருகில் அமரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், கடும் கோபத்துடன், அவர் வீட்டுக்கு கிளம்பி போய் விட்டார். தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து, டில்லி மேலிடத்திடம், திருநாவுக்கரசர் புகார் தெரிவித்தார்.

அவரை, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சமாதானப்படுத்தினார். ஆனால், அவர் சமாதானம் அடையவில்லை. எனவே, அவரை, 22ம் தேதி, டில்லி வரும்படி, ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.


'டிபன்' சாப்பிட்ட தி.மு.க., - எம்.பி.,உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., மாநில நிர்வாகியாக உள்ள எம்.பி., ஒருவர், திடீரென, தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார். தன் காரில் ஏறாமல், கட்சிக்காரர் ஒருவரின் காரில் ஏறி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பெரிய ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு கார் நிறுத்துமிடத்தில் இருந்தபடி, ஓட்டலில் இருந்து, டிபன் வாங்கி வரச் சொல்லி, சாப்பிட்டு முடித்தார். மீண்டும், உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றார்.


காங்கிரஸ் எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ., புறக்கணிப்பு!தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, கொரோனா தொற்று பாதிப்பில் குணமடைந்து, தன் வீட்டில் இருக்கிறார். அதனால், அவர் பங்கேற்க முடியவில்லை. சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தன் உடல் நலம் கருதி, வர மறுத்து விட்டார். காங்கிரஸ் எம்.பி.,க்கள் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலரும் பங்கேற்கவில்லை

* விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். ஆனால், தனிப்பட்ட காரணங்களால், தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை என கூறிவிட்டு, பாதியில் சென்றார்

* தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதான மேடையில் இடமும், ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுக்கு தனி மேடையில் இடமும் என, பாகுபாடு காட்டி பிரித்திருந்ததால், சிலர் அதிருப்தியுடன் காணப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-202016:27:37 IST Report Abuse
oce இது போராட்டமில்லை.தேர்தலுக்கான ஏமாற்று வேலை. ரெண்டுங்கெட்டான் பாமர கூட்டம் இதை பார்த்து திமுகவுக்கு ஓட்டுப்போடுவதற்கான திமுகவின் ஜில்மா வேலை.
Rate this:
Cancel
19-டிச-202013:53:28 IST Report Abuse
அரபுஅநீதிஅந்தப்புரம் உலகத்திலேயே உண்ணா விரதத்திற்கு மெனு இருக்கிற ஒரே கட்சி திமுக தான் . உன்ன விரதம் முடிந்தவுடன் என்ன சாப்பிடணும்னு செயற்குழு முடிவு செய்யும். திமுக மூணு எழுத்து, அதனாலே விரதமும் மூணு மணி நேரம்தான்.
Rate this:
19-டிச-202016:02:10 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்துதமிழ்நாட்டில் ஆறுகளில் மணல் எடுத்து தூர் வாராமல் கடந்த பத்தண்டுகலாய் குட்டி சுவராகி உளள்து கிராநைட் மலைகள் கடந்த பத்தாண்டுகளாக மக்களுக்கு இடையூறாக இருக்கிறது ... நில அபகரிப்பு இலலாமல் அரசியல் வாதிகள் தவிக்கும் அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டு விட்டது ...சினிமா நடிகர்களுக்கு பாராட்டு விழாக்கள் நடத்தாமல் ...மருத்துவ கல்லூரியில் சேர ஏழரை சதவிகித உள் ஒதுக்கீடு செய்கிறார் எடப்பாடி .. இது உருப்படும் அரசாங்கமா ?...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
19-டிச-202012:09:02 IST Report Abuse
Anand அந்த பச்சை துண்டு, மாஸ்க் யாரிடம் அடித்து பறித்ததோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X