'மொபைல்' ஏவுகணை

Added : டிச 18, 2020
Share
Advertisement
'மொபைல்' ஏவுகணைகாலத்துக்கு ஏற்ப, அச்சுறுத்தல்களும், போர்களின் தன்மை களுடன் மாறுபடுகின்றன. இன்றைக்கு, 'மொபைல் போன்'களின் வீச்சு, ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்ததாக உள்ளது. எனவே, எல்லை தாண்டாமலேயே, எதிரிகள் நம்மை வந்தடைய முடியும். தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களில் இருந்து நம்மையும், மற்றவர்களையும் பாதுகாக்க, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது

'மொபைல்' ஏவுகணை
காலத்துக்கு ஏற்ப, அச்சுறுத்தல்களும், போர்களின் தன்மை களுடன் மாறுபடுகின்றன. இன்றைக்கு, 'மொபைல் போன்'களின் வீச்சு, ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்ததாக உள்ளது. எனவே, எல்லை தாண்டாமலேயே, எதிரிகள் நம்மை வந்தடைய முடியும். தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களில் இருந்து நம்மையும், மற்றவர்களையும் பாதுகாக்க, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர், பா.ஜ.,

தவறான துாண்டுதல்

மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு, அரசியலில் தோல்வி அடைந்து, அதனால் மன உளைச்சலுக்கு ஆளான தலைவர்களால், விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். ராகுலுக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. ஆனால், அவர் தன்னைவிவசாயிகளின் தலைவராக சித்தரித்துக் கொள்ள முயல்கிறார்.

முக்தர் அப்பாஸ் நக்வி

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,

இது முடியாட்சி அல்ல

அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ., உள்ளிட்டவை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசு, மற்ற பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவு, நம் பெரிய மனதை பறைசாற்றும். இது ஜனநாயக நாடு. முடியாட்சி அல்ல.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X