எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் போலி ரசீது மோசடி ஆதாரங்கள் அழிப்பு என புகார்

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூரில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடந்த, போலி ரசீது மோசடி தொடர்பான கணினி ஆதாரங்கள், டி.சி.எஸ்., கணினி நிறுவன பணியாளர்கள் துணையுடன் அழிக்கப்பட்டுள்ளதாக, சார் - பதிவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 'ஜாயின்ட்' - 1 மற்றும் 2 உள்ளிட்ட, சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'ஆன்லைன்' பத்திரப்பதிவில் ரசீதுகளை ரத்து செய்து, மோசடி நடந்தது
திருப்பூர் போலி ரசீது மோசடி
ஆதாரங்கள் அழிப்பு என புகார்

திருப்பூரில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடந்த, போலி ரசீது மோசடி தொடர்பான கணினி ஆதாரங்கள், டி.சி.எஸ்., கணினி நிறுவன பணியாளர்கள் துணையுடன் அழிக்கப்பட்டுள்ளதாக, சார் - பதிவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், 'ஜாயின்ட்' - 1 மற்றும் 2 உள்ளிட்ட, சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'ஆன்லைன்' பத்திரப்பதிவில் ரசீதுகளை ரத்து செய்து, மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், உதவியாளர்கள், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து, பல கோடி ரூபாயை சுருட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய, இரண்டு உதவியாளர்கள் உட்பட, ஐந்து பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவன் தலைமையில், தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள நபர்கள் மீது, நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்கள் வெளியில் வர துவங்கியுள்ளன.இந்நிலையில், போலி ரசீது மோசடி விவகாரத்தில், ஆதாரங்கள் அழிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:திருப்பூர் விவகாரம், உயர் அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே, விளக்கம் அளிக்க, திருப்பூர் சார் - பதிவாளர்கள், சென்னையில் பதிவுத் துறை தலைவரை சந்திக்க முயன்றனர்.ஆரம்பத்தில் தவிர்த்த, பதிவுத்துறை தலைவர், பின்னர் அவர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, சார் - பதிவாளர்களுக்கான, 'லாக் இன்' ரகசிய குறியீடுகளை, உதவியாளர்கள் பயன்படுத்தியது குறித்து, பதிவுத் துறை தலைவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.மேலும், 'ஆன்லைன்' பத்திரப்பதிவில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை, சார் - பதிவாளர்கள் விளக்கினர். மேலும், டி.சி.எஸ்., பணியாளர்கள் தொடர்பு குறித்தும் விவரித்தனர்.

இந்த மோசடியில், டி.சி.எஸ்., பணியாளர்களையும் விசாரிக்க வேண்டும். ரசீதுகளை ரத்து செய்யும் வழிமுறையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதற்கு, டி.சி.எஸ்., கணினி தொழில்நுட்ப நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், பதிவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில், திருப்பூர்மோசடி தொடர்பான கணினி பதிவுகள், டி.சி.எஸ்., பணியாளர்கள் துணையுடன் அழிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வருகிறது.இதில், துறை ரீதியான விசாரணை போதுமானதாக இருக்காது. மாநிலம் முழுதும், விசாரணை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, சார் - பதிவாளர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
19-டிச-202008:25:54 IST Report Abuse
RajanRajan கணினி ஆதாரங்களை அழித்தாலும் சைபர் க்ரைம் வழியாக திரும்ப பெறலாம். எனவே இங்கே மெயின் சர்வர் உடனடி பாதுகாப்புக்கு உட்படுத்த பட வேண்டும். அங்கே எவனாச்சும் கொளுத்தி போட்டால் மொத்தமும் கலைஞ்சுடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X