திருத்தணி : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கால்நடை மருந்தகத்திற்கு, புதிய சாலை அமைக்கும் பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், மாநில நெடுஞ்சாலை அருகே, 1 கிலோ மீட்டர் துாரத்தில் கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது.இந்நிலையில், கால்நடை மருந்தகத்திற்கு ஊராட்சி நிர்வாகம் போதிய சாலை வசதி ஏற்படுத்தவில்லை.இதனால், கால்நடைகள் சிகிச்சைக்காக, வயல்வெளியில் இறங்கி மக்கள் ஓட்டிச் செல்கின்றனர். மழை பெய்தால், மருந்தகத்திற்கு செல்லும் வயல்வெளியில் தண்ணீர் தேங்கியும், சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், மருத்துவ ஊழியர்கள், விவசாயிகள், கால்நடைகளை ஓட்டிச் செல்ல சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, மத்துார் ஊராட்சி நிர்வாகம், மாநில நெடுஞ்சாலையில் இருந்து, கால்நடை மருந்தகத்திற்கு செல்வதற்கு வசதியாக, ஜே.சி.பி., இயந்திரம் மூலம், புதிய மண் சாலை அமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.இப்பணிகள் முடிந்தவுடன், தார்ச் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE