பொது செய்தி

தமிழ்நாடு

சர்வீஸ் சாலையில் மழை நீர் தேக்கம்; கால்வாய் திறந்து கிடப்பதால் ஆபத்து

Added : டிச 18, 2020
Share
Advertisement
சோழவரம் : சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கி இருப்பதுடன், அருகில் உள்ள கால்வாயும், திறந்த நிலையில் இருப்பதால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த, தேவனேரி பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கி இருக்கிறது. வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.சர்வீஸ் சாலையினையொட்டி, அமைக்கப்பட்டுள்ள

சோழவரம் : சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கி இருப்பதுடன், அருகில் உள்ள கால்வாயும், திறந்த நிலையில் இருப்பதால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த, தேவனேரி பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கி இருக்கிறது. வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.சர்வீஸ் சாலையினையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கால்வாயும் திறந்த நிலையில் கிடப்பதுடன், அதில் மழை நீர் நிரம்பி உள்ளது.கடந்த, 2016ம் ஆண்டு, மழை நீர் செல்வதில் தடை ஏற்பட்டதால், கால்வாய் மீது போடப்பட்டிருந்த சிமென்ட் மூடிகள் அகற்றப் பட்டது. அதன் பின், கால்வாய் மூடிகள் மீண்டும் மூடப்படாமல் கிடக்கிறது.

தற்போது, சர்வீஸ் சாலையிலும், அதை ஓட்டியுள்ள கால்வாயிலும் மழை நீர் தேங்கி இருப்பதால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்பவர்கள் கால்வாயா, சாலையா எனத் தெரியாமல் அதில் தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.அசம்பாவிதங்களை தவிர்க்க மேற்கண்ட சர்வீஸ் சாலையில், தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கும், திறந்து கிடக்கும் கால்வாய்களை மூடுவதற்கும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X