தீயாக பரவியது வைரஸ் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Added : டிச 18, 2020
Share
Advertisement
புதுடில்லி:'வழிமுறைகளை முறையாக செயல்படுத்தாததால், கொரோனா வைரஸ், காட்டுத் தீயைப் போல வேகமாக பரவியது' என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று, தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, பிறப்பித்த உத்தரவில்கூறப்பட்டு

புதுடில்லி:'வழிமுறைகளை முறையாக செயல்படுத்தாததால், கொரோனா வைரஸ், காட்டுத் தீயைப் போல வேகமாக பரவியது' என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று, தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, பிறப்பித்த உத்தரவில்கூறப்பட்டு உள்ளதாவது:இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால், உலக மக்கள் அனைவரும், பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது, உலகப் போரைப் போன்றது.

ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு, பல நாட்கள் முன்பே, அது குறித்து மக்களுக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், மக்கள் அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து, ஊரடங்குக்கு தயாராக இருந்திருப்பார்கள்.கொரோனா வைரசை எதிர்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை, முறையாக செயல்படுத்தாததால், வைரஸ், காட்டுத் தீயைப் போல வேகமாக பரவியது.

கடந்த எட்டு மாதங்களாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதி யாகவும், சோர்ந்துவிட்டனர். அவர்களுக்கு இடைக்கால ஓய்வு வழங்கப்படவேண்டும்.இந்த கொரோனா காலத்தில், மத்திய அரசுடன் இணைந்து, அனைத்து மாநில அரசுகளும் ஒற்றுமையுடன் பணியாற்றவேண்டும். குடிமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு, முன்னுரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X