திருவள்ளூர் : கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் செயல்பட்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் எஸ்.பி.,க்கு, 'ஸ்கோச்' விருது வழங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று காலத்தில், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க, காவல் துறை சார்பாக, எஸ்.பி., அரவிந்தன், பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.குறிப்பாக, திருமழிசையில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி சந்தையில், சந்தைக்கு வரும் நபர்கள், சமூக இடைவெளியை பின்பற்ற நவீன முறையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட, 'இன்ஸ்டன்ட் ரெஸ்பாண்டர் டு இம்ப்ரூவ் சோஷியல் டிஸ்டன்சிங்' என்ற கருவியை, ஒவ்வொரு கடையிலும் வைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இக்கருவி, சமுக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மக்கள் ஒன்று கூடும்போது, எச்சரிக்கை ஒலி எழுப்பி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, உறுதுணையாக இருந்துள்ளது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை குறைத்தமைக்காக, எஸ்.பி., அரவிந்தன் மற்றும் மாவட்ட காவல்துறைக்கும், 2020ம் ஆண்டிற்கான, 'ஸ்கோச் விருது' வழங்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE