பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு

Added : டிச 18, 2020
Share
Advertisement
திருக்கோவிலூர் : அரகண்டநல்லூரில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கலெக்டர் சந்தித்து ஆறுதல் கூறினார். அரகண்டநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோயில் அருகே திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் தனியார் பள்ளிக்கு முன்பாக வெள்ளம்

திருக்கோவிலூர் : அரகண்டநல்லூரில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கலெக்டர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரகண்டநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோயில் அருகே திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் தனியார் பள்ளிக்கு முன்பாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதன் காரணமாக புது நகரிலிருந்த 50க் கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பலரது வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

தகவலறிந்த கலெக்டர் அண்ணாதுரை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். திருமண மண்டபத்தில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்க உத்தரவிட்டார்.கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் விழிச்செல்வன், பி.டி.ஓ., சீனிவாசன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தனர்.வெள்ள பாதிப்பை நிரந்தரமாக தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X