திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள கடைகள், வரும், 22ம் தேதி, மூன்றாம் முறையாக, பொது ஏலம் விடப்பட உள்ளது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி பல்லாயிரக்கணக்கானவர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர்.பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில், பூஜை பொருட்கள், பூ மாலை, உப்பு மிளகு, சுவாமி படங்கள் உட்பட விளையாட்டு பொம்மைகள் விற்பதற்காக, 35க்கும் மேற்பட்ட கடைகள் ஏற்படுத்தி, ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுகிறது.
அந்த வகையில், மேற்கண்ட கடைகளுக்கு, கடந்த நவம்பர் மாதம் முதல் முறையும், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டாவது முறையும், கோவில் நிர்வாகம் பொது ஏலம் அறிவித்திருந்தது. ஆனால், ஏலத் தொகை அதிகம் என, அனைத்து வியாபாரிகளும் கடைகள் ஏலம் எடுக்கவில்லை.
இதனால், இரு நாட்களுக்கு முன், கோவில் நிர்வாகம் அனைத்து கடை களுக்கும், 'சீல்' வைத்து, தகடுகள் அடித்தனர்.இந்நிலையில், வரும், 22ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கோவில் தலைமை அலுவலகத்தில், மூன்றாவது முறையாக மலைக்கோவில் கடைகளுக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE