பழவேற்காடு : பழவேற்காடில், கடல் சீற்றமாக இருந்ததால், இரு தினங்களாக, மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர்.
பழவேற்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த, மீனவர்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர், கடந்த மாதம், 'நிவர் புயல்' எதிரொலியாக, ஒரு வாரம் தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.புயல் எச்சரிக்கை முடிந்து, தொழிலுக்கு சென்று வருவாய் ஈட்டி வந்த நிலையில், கடலோர மாவட்டங்களில், இரு தினங்களுக்கு மழை பொழிவு இருக்கும் என, வானிலை மையம் அறிவித்திருந்தது.
பழவேற்காடு கடலிலும், இரு தினங்களாக, கடல் சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர்.மீனவர்களின் மீன்பிடி படகுகள் கடற்கரை மற்றும் பழவேற்காடு ஏரிக்கரைகளில் ஓய்வெடுக்கின்றன.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்போது, படகுகளை இயக்குவதில் சிரமம் ஏற்படும்.முகத்துவாரத்தின் வழியாக கடலுக்கு செல்லும்போது, படகுகள் கவிழவும் வாய்ப்பு உள்ளது. அதனால், தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE