திருத்தணி : ஊராட்சி ஏரிக்கு, நீர்வரத்து அதிகரித்ததால், மதகு சேதம் அடைந்து, தண்ணீர் வீணாவதை பொதுப்பணித் துறையினர் மணல் மூட்டைகள் போட்டு சீரமைத்தனர்.
கோரமங்கலம் ஊராட்சி பெரிய ஏரி, 'நிவர், புரெவி' புயலால் பெய்த கன மழையால், ஏரி முழு கொள்ளளவை எட்டியது.இதன் உபரி நீர் கடைவாசல் வழியாக வெளியேறியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஏரிக்கு கூடுதல் நீர்வரத்து வந்ததால், மதகில் லேசான கசிவு ஏற்பட்டது.நேற்று அதிகாலை, திருத்தணி பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு மணல் மூட்டைகளுடன் வந்தனர்.பின், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன், மதகில் ஏற்பட்ட கசிவை தடுத்து நிறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE