சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பி. ஜியாவுல் ஹக்உத்தரவின் பேரில் சங்கராபுரம்இன்ஸ்பெக்டர் செந்தில் வினாயகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் போலீசார் சங்கராபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அதில், குட்கா விற்ற தனகோட்டி, 30; வடசேமபாளையம் அப்துல் ரஷீத் மனைவி சபுராபீ,45; சங்கராபுரம் ஜாகீர் மகன் பிலால், 23; பூட்டை கோவிந்தசாமி மகன் சிவக்குமார், 45; ஆகிய4 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 25 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மது விற்றவர் கைதுமது பாட்டில் விற்ற அரசம்பட்டைச் சேர்ந்த காந்தி மகன் மாணிக்கம், 50; என்பவரை கைது செய்து, 6 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE