திண்டிவனம் : திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் இறந்தது.
புதுச்சேரி-திண்டிவனம் பைப்பாஸ் சாலையில், ஓமந்தூர் அருகில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, புள்ளி மான் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் சாலையில் இறந்து கிடந்தது. தகவலறிந்த திண்டிவனம் வனத்துறை வனவர் பாலசுந்தரம் தலைமையில், வனக்காப்பாளர்கள் ஏழுமலை, முருகன் ஆகியோர் மானை கைப்பற்றி, கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். பின், மானை வனத்துறை புதைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE