திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் உடல் நேற்று மீட்கப்பட்டது.
மணலுார்பேட்டை அடுத்த சீர்பாதநல்லுாரைச் சேர்ந்தவர் கோவிந்தன், 45; மாற்றுத்திறனாளி. திருமணமாகாதவர். இவரது சகோதரி வீடு அய்யம்பாளையத்தில் உள்ளது. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் தென்பெண்ணை ஆறு வழியாக கோவிந்தன் நடந்து சென்றார்.அப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில் கோவிந்தன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தேடியும் கோவிந்தன் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை திருவரங்கம் அருகே கோவிந்தன் உடல் ஒதுங்கியிருப்பது தெரியவந்தது.மணலுார்பேட்டை போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE