ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தொடரும் மழையால் ஊரணிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. காலி பிளாட்கள், தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழையால் பல ஊரணிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளம், அம்மா பூங்கா, சேதுபதி நகர், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம், எஸ்.பி., அலுவலகம், பேராவூர் ஊராட்சி கிருஷ்ணாநகர், பாரதிநகர் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று வட்டனம் 46, ராமநாதபுரம் 47, மண்டபம் 7.80, ராமேஸ்வரம் 1, தங்கச்சிமடம் 2.4, பாம்பன் 1.20, ஆர்.எஸ். மங்கலம் 49.50, திருவாடானை 38, தொண்டி 28, தீர்த்தாண்டதானம் 56.30, பரமக்குடி 72.00, கமுதி 51.60 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது. மழைக்கு இதுவரை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. நேற்றும் மதியம் 12:00மணி வரை மழைபெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் ரோட்டோரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE