சின்னசேலம் : சின்னசேலம், கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு செய்தார்.
சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஜியாவுல் ஹக் நேற்று காலை, குற்றப் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, பொது நாட்குறிப்பு, காவல் நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.அப்போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும், காவல் பணியின் போது கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டுமென, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
டி.எஸ்.பி., ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர். இதேபோன்று, சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்குச் சென்ற எஸ்.பி., அங்கும் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர்கள் சத்யசீலன், பிரபாகரன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE