வெள்ளாடுகள் வழங்கல்
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், கால்நடை துறையின் மூலம், தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருத்தணி கால்நடை துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் தலைமை வகித்தார். இதில், திருத்தணி எம்.எல்.ஏ.,நரசிம்மன் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட, 200 பயனாளிகளுக்கு, ஆடுகள் வழங்கினார்.ஒரு பயனாளிக்கு, நான்கு ஆடுகள் வீதம், மொத்தம், 800 ஆடுகள் வழங்கப்பட்டன.அடுத்த வாரம், ஆடுகள் வாங்கிய பயனாளிகளுக்கு கொட்டகை அமைக்கவும், பயிற்சிக்காவும், 2,300 ரூபாய் வழங்கப்படும் என, கால்நடை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
பட்டா கோரி மனு
ஆர்.கே.பேட்டை: புறம்போக்கு இடத்தில், குடியிருப்பவர்கள், இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என, வட்டாட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, பத்மாபுரம் கிராமத்தில் உள்ள பாறை புறம்போக்கு இடத்தில், 19 குடும்பத்தினர், ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.அவர்கள், வசித்துவரும் இடத்திற்கு, பட்டா வழங்க வேண்டும் என, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் பரமசிவத்திடம் நேற்று, நேரில் மனு அளித்தனர்.
800 வெள்ளாடுகள் வழங்கல்
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், கால்நடை துறையின் மூலம், தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருத்தணி கால்நடை துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் தலைமை வகித்தார். இதில், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட, 200 பயனாளியருக்கு, ஆடுகள் வழங்கினtர்.ஒரு பயனாளிக்கு, நான்கு ஆடுகள் வீதம், மொத்தம், 800 ஆடுகள் வழங்கப்பட்டன.
ரூ.1.37 கோடியில் நலத்திட்ட உதவி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் சார்பில், 449 பயனாளியருக்கு, 1.37 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், நேற்று வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி தலைமையில், அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.
கொத்தடிமைகள் மீட்பு
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அடுத்த, வள்ளிபுரம் பகுதியில், கொத்தடிமையாக சிலர் வேலை செய்வதாக, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிப்ரியா தலைமையில், தாசில்தார் பர்வதம், துணை தாசில்தார் கார்த்திக்ரகுநாத் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று, அங்கு ஆய்வு செய்தனர்.
இதில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வள்ளியப்பன், 35, அவரது மனைவி மல்லிகா, 30, மற்றும் இரண்டு பெண், ஓர் ஆண் குழந்தை ஆகியோர், ஐந்து ஆண்டுகளாக, மரம் வெட்டும் தொழிலில், கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது. அவர்களை மீட்ட வருவாய் துறையினர், தலா, 20 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை, வங்கியில் செலுத்தப்பட உள்ளதாக, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE