பொது செய்தி

இந்தியா

கைலாசா நாட்டுக்கு வாங்க: நித்தியானந்தா அழைப்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
பெங்களூரு:ஈக்குவடார் நாட்டின் தீவு ஒன்றில், 'கைலாசா' என்ற பெயரில், புதிய நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா சாமியார், தன் நாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவச விசா, பயண வசதி செய்வதாக அறிவித்துள்ளார்.தமிழகத்தின் திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர், நித்தியானந்தா. கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தின், பிடதியில், ஆஸ்ரமம் நடத்தி வந்த அவர், பல்வேறு சர்ச்சைகளுக்கு

பெங்களூரு:ஈக்குவடார் நாட்டின் தீவு ஒன்றில், 'கைலாசா' என்ற பெயரில், புதிய நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா சாமியார், தன் நாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவச விசா, பயண வசதி செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர், நித்தியானந்தா. கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தின், பிடதியில், ஆஸ்ரமம் நடத்தி வந்த அவர், பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர், 'யு -டியூப்' சமூக வலைதளம் மூலம், பக்தர்களிடம் பேசி வந்தார்.

சமீபத்தில், தென் அமெரிக்காவில், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, சிஷ்யைகளுடன் அவர் அங்கேயே தங்கியுள்ளார்; அந்த நாட்டிற்கு என தனி பணம், தனி சட்ட திட்டங்களை வகுத்துள்ளார். அவரின் சிஷ்யர்கள் தவிர, பிறருக்கு அங்கு செல்ல அனுமதியில்லை எனக் கூறப்பட்டது. அதை அவரும் பல முறை ஒப்புக் கொண்டார்.

'சிவனே என, தமிழகத்திலும், கர்நாடகாவிலும் இருந்த என் மீது, வழக்குகள்மேல் வழக்குகள் போட்டு, இங்கு விரட்டி விட்டனர். இங்கு நான் தான் ராஜா; கைலாசா என்ற, இந்த நாட்டுக்கு நான் தான் தலைவர்' என அறிவித்தார்.இந்நிலையில், தன்னை தரிசிக்க விரும்புவோர், கைலாசா வரலாம் என நித்தியானந்தா, அறிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோ:என்னை தரிசிக்க விரும்புவோர், எனது கைலாசா நாட்டுக்கு வரலாம். மூன்று நாட்கள் இங்கு தங்கி, ஏதாவது ஒரு நாள் என்னை தரிசிக்கலாம். விரும்புவோர், கைலாசா இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இங்கு வரும் பக்தர்கள்,தங்கள் சொந்த செலவில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு வர வேண்டும். அங்கிருந்து கைலாசா நாட்டுக்கு சொந்தமான, தனி விமானங்கள், 15 ஆயிரம் கி.மீ.,யில் உள்ள, ஈக்குவடார் நாட்டின் கைலாசா தீவுக்கு அழைத்து வரும்.

மூன்று நாட்களுக்கு பின், மீண்டும் விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவர். இந்த விமான பயணம் முற்றிலும் இலவசம். கைலாசா நாட்டில் பக்தர்கள், அதிகபட்சம் மூன்று நாட்கள் இருக்கலாம்.இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X